Jayam Ravi: டைரக்டராக களமிறங்கும் ஜெயம் ரவி.. அட ஹீரோ இந்த நடிகரா.. அடிதூள்!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜெனீ படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பாலிவுட் படங்களிலும் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் ஜெயம் ரவி.
அவரது பிரதர் படம் தீபாவளியையொட்டி வரும் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்களிலும் சிறப்பாக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்ததாக இயக்கத்திலும் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் ஜெயம்ரவி: நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜெயம் ரவி அடுத்தடுத்து ஈடுபட்டு வருகிறார். ஜெயம் படம் மூலம் தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்திருந்தார் ரவி. இந்த படத்தின் டைட்டிலுடன் அவருக்கு ஜெயம் ரவி என்ற பெயரே நிலைத்தது. இந்த படத்துடன் அவரது அனைத்து முயற்சிகளும் ஜெயத்திலேயே நடைபோட்டு வருகிறது. சாக்லேட் ஹீரோவாகவும் காமெடி ஹீரோவாகவும் நடித்து வந்த ஜெயம் ரவிக்கு ஆக்ஷனும் சிறப்பாக கை கொடுத்தது.
பிரதர் படம்: பேராண்மை உள்ளிட்ட இவரது படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க ஆக்ஷன் படங்களாக அமைந்தன. இந்நிலையில் தற்போது அடுத்தடுத்து மூன்று படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. முதலாவதாக எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள பிரதர் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. தீபாவளி ரிலீசாக இந்த படம் வரும் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்து காதலிக்க நேரமில்லை, ஜெனீ படங்கள் அவரது நடிப்பில் உருவாகியுள்ளன.
பாலிவுட்டிலும் நடிக்கும் ஜெயம்ரவி: இந்த படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ள நிலையில் பாலிவுட்டிலும் இரண்டு படங்களில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாகவும் அதற்காகவே அவ்வப்போது அவர் மும்பை சென்று வருவதாகவும் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் முன்னதாக ஆர்த்தியுடன் விவாகரத்து குறித்து அறிவித்த ஜெயம் ரவி, மும்பையில் செட்டிலாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவி இயக்கத்திலும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது முதல் பட ஹீரோவாக நடிகர் யோகி பாபு கமிட்டாகியுள்ளதாகவும் விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
டைரக்டராகும் ஜெயம்ரவி: ஜெயம்ரவி -யோகி பாபு கூட்டணி முன்னதாக கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த அடுத்ததாக இந்த காம்பினேஷன் மீண்டும் இணையவுள்ளது. இந்தப் படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும், ஹீரோவாக தன்னை நிரூபித்துள்ள ஜெயம்ரவிக்கு இயக்கமும் கைக்கொடுக்குமா, என்பது உள்ளிட்ட கேள்விகளை அவரது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் கூடிய விரைவில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











