Jayam Ravi :ஜெயம் ரவியுடன் இணையும் நித்யா மேனன்.. யாரு டைரக்டர் தெரியுமா?
சென்னை : நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
அடுத்ததாக இவரது நடிப்பில் இறைவன் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சைரன் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்தப் படங்களை தொடர்ந்து எம் ராஜேஷ் இயக்கத்திலும் புதிய படத்தில் இணையவுள்ளதா ஜெயம் ரவி. அடுத்ததாக வில்லேஜ் சப்ஜெக்ட்டில் முத்தையா இயக்கத்திலும் இணையவுள்ளார்.
கிருத்திகா உதயநிதியுடன் இணையும் ஜெயம் ரவி : நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து அகிலன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. குறிப்பாக பொன்னியின் செவ்வன் 2 படம் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான இந்தப் படத்தில் அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. அருண்மொழி வர்மனாக மற்ற நடிகர்களுடன் போட்டிப் போட்டு நடித்திருந்தார் ஜெயம் ரவி.
முதல் பாகத்துடன் கம்பேர் செய்யும் போது இரண்டாவது பாகம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. வசூலிலும் பின்தங்கியுள்ளது.ஆயினும் ஜெயம் ரவியின் நடிப்பு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்தப் படம் அவருக்கு அதிகமான பட வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது. அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் இறைவன் படம் ரிலீசாகவுள்ள நிலையில், சைரன் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அடுத்ததாக எம் ராஜேஷ் இயக்கத்திலும் ஜெயம் ரவி தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார். எப்போதும் காமெடி டிராக்கிலும் தொடர்ந்து சிறப்பாக பயணித்து வருபவர் ஜெயம் ரவி. இந்நிலையில் தற்போது எம் ராஜேஷ் இயக்கத்திலும் ஜெயம் ரவி அடுததப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். காமெடி ஆக்ஷன் மற்றும் சென்டிமெண்ட் கலந்து இந்தப் படம் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக கிராமத்து கதைக்களத்தில் சிறப்பான படங்களை கொடுத்துவரும் முத்தையா இயக்கத்திலும் அவர் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் மிஷ்கினின் உதவி இயக்குநர் புவனேஷ் இயக்கத்திலும் அவர் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். ஜெயம் ரவியின் 32வது படமான இந்தப் படத்தில் அவருக்கு 3 ஜோடிகள் என்றும் க்ரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வேறொரு நாயகியிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயம் ரவியின் கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
அடுத்ததாக அகமது இயக்கத்தில ஜன கன மன படத்திலும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் JR33 படத்திலும் அவர் இணையவுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காதல் சப்ஜெக்டில் எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் தயாரிக்கவுள்ளதாகவும் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. JR32 படத்தை தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங் அக்டோபரில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











