“பொன்னியின் செல்வன்“சீனியர் நடிகர்களை விட அவருக்குத்தான் சம்பளம் அதிகம்..நம்புறமாதிரி இல்லையே!
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சீனியர் நடிகர்களை விட ஜெயம் ரவிக்குத்தான் அதிக சம்பளம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்த என 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.
படம் வெளியாக சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில் படம் குறித்த அப்டேட்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன்
மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் இரு பாகங்களாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

12 பாடல்கள்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்திலிருந்து மொத்தம் 12 பாடல்கள் உருவாகி உள்ளன. இதில் ஒரு பாடலை இயக்குனர் மணிரத்னமே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக மணிரத்னம் படங்களுக்கு வைரமுத்து பாடல்களை எழுதுவார். ஆனால் முதல் முறையாக பொன்னியின் செல்வன் படத்துக்காக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், வெண்பல கீதையன், கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.

பொன்னி நதி
மோஷன் போஸ்டர், கேரக்டர்கள் போஸ்டர், டீசர் ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிட்டு ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக துவக்கி உள்ளது. இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக பொன்னி நதி, இரண்டாவது பாடலான சோழா சோழா வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது.

அவருக்குத்தான் அதிக சம்பளம்
இந்நிலையில், இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு கொடுத்துள்ள சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதில் ,இப்படத்தில் நடித்த சீனியர் நடிகரான விக்ரம்,ஜெயராம் ரமேஷ், பார்த்திபன், பிரபு, கார்த்தி என மற்ற எல்லோரையும் விட ஜெயம் ரவிக்குதான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஏனென்றால் படத்தில் மற்ற நடிகர்களை விட அவருக்குதான் முக்கியத்துவம் அதிகம் என்றும் அதிக நாட்கள் படப்பிடிப்பில் நடித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

நம்புறமாதிரி இல்லையே!
விக்ரம், கார்த்தி மற்றும் ஐஸ்வர்யா ராயை விட ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் நம்பறமாதிரியா இருக்கு என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications