பிரதீப் பயங்கரமான ஆளுன்னு முன்னாடியே கண்டுபிடிச்சுட்டேன்.. ஜெயம் ரவி உற்சாகம்!

சென்னை : நடிகர் ஜெயம் ரவியின் அகிலன் படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலக்கலாக கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை நடிகர் ஜெயம் ரவி ரசிகர்களிடையே பகிர்ந்துக் கொண்டார்.

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி, ஜெயம் படத்தில் துவங்கிய தன்னுடைய திரையுலக சாம்ராஜ்யத்தை சிறப்பாக்கியுள்ளார். ஜெயம் ரவி என்றால் மினிமம் சக்சஸ் கியாரண்டி ஹீரோ என்ற பெயரையும் பெற்றுள்ளார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படம் இவருக்கு சிறப்பான பெயரையும் வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளது.

பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி

பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி

இந்தப் படத்தில் இளவரசராக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் ஜெயம் ரவி. முதல் பாகத்தில் இவருக்கு காட்சிகள் குறைவாக காணப்படும் நிலையில், அடுத்த பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த பாகத்தில் ஜெயம் ரவிக்கு அதிகமான காட்சிகள் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ப்ரமோஷன்களிலும் முதல் பாகத்தைப் போலவே ஜெயம் ரவி சிறப்பாக ஈடுபட உள்ளார்.

 ஜெயம் ரவியின் அகிலன் படம்

ஜெயம் ரவியின் அகிலன் படம்

இதனிடையே வரும் 10ம் தேதி ஜெயம் ரவியின் அகிலன் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் கேங்ஸ்டராக ஜெயம் ரவி நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. துறைமுகத்தையொட்டிய பகுதிகளில் இந்தப் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு நிகழும் கடத்தல் சம்பவங்களை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

அகிலன் ட்ரெயிலர் வெளியீடு

அகிலன் ட்ரெயிலர் வெளியீடு

மேலும் படத்தில் தான்யா ரவிச்சந்திரனும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கடந்த 4ம் தேதி படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்ற நிலையில், ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. அந்த ட்ரெயிலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிக வியூஸ்களையும் பெற்றுள்ளது.

பிரதீப் குறித்து ஜெயம் ரவி பாராட்டு

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி அதிகமான விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். அப்போது அவருடைய கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் குறித்த கேள்விக்கும் பதிலளித்தார். பிரதீப்பின் வளர்ச்சியை பார்க்கும்போது யெஸ் என்று கத்த வேண்டும் போல இருக்கிறது என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். அனைவருக்கும் முன்பே அவரது டேலண்டை தான் அறிந்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதீப் பயங்கரமான ஆள்

பிரதீப் பயங்கரமான ஆள்

அனைவருக்கும் முன்னதாக இவன் பயங்கரமான ஆள் என்று தான் தெரிந்துக் கொண்டதாகவும் அந்த சந்தோஷம் தனக்கு உள்ளதாகவும் ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார். தான் பிரதீப்பை அறிமுகம் செய்தது பெரிய விஷயம் இல்லை என்றும், தான் அவரது திறமையை கண்டுபிடிக்கவில்லை, மாறாக அறிமுகம் மட்டுமே செய்துள்ளதாகவும் ஜெயம் ரவி கூறியுள்ளார்.

சாத்தியமான வளர்ச்சி

சாத்தியமான வளர்ச்சி

பிரதீப் தன்னுடைய வளர்ச்சியையும் வெற்றியையும் அவராகவே உருவாக்கிக் கொண்டதாகவும் அவர் திறமைசாலி, அவர் புத்திசாலி அதனால் அவரது வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதாகவும் ஜெயம் ரவி மேலும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய அகிலன் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டில், தன்னுடைய முன்னாள் படத்தின் இயக்குநர் குறித்த ஜெயம் ரவியின் பாராட்டு அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X