Jayam Ravi: என்னை போய் இப்படி நடிக்க வச்சிட்டீங்களே.. குமுறிய சமுத்திரக்கனி.. ஜெயம்ரவி கூல்!
சென்னை: நடிகர் ஜெயம்ரவியின் சைரன் படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஆண்டில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் என இரு படங்களை கொடுத்த ஜெயம்ரவி நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே சைரன் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் அவரது நடிப்பில் உருவாகிவருகிறது. எப்போதும் அறிமுக இயக்குநர்களுக்கு மதிப்பளித்து வாய்ப்பளிப்பவர் ஜெயம்ரவி. அந்த வகையில் இரும்புத்திரை, டார்லிங் போன்ற படங்களில் உதவி இயக்குநர், எழுத்தாளராக பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் இந்தப் படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சைரன் என்ற பெயருக்கு ஏற்றபடி இந்தப் படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் கைதி என இருவேறு கேரக்டர்களில் ஜெயம்ரவி நடித்துள்ளார். இந்த இரு கேரக்டர்களுக்கும் சைரனுக்கும் தொடர்புள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தப் படம் ஜெயம்ரவிக்கும் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் என இரண்டு நாயகிகள் உள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாக வெயிட்டான ரோலில் நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்ளை கவர்ந்துள்ளன.

நடிகர் ஜெயம்ரவி: நடிகர் ஜெயம்ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. மினிமம் கியாரண்டி ஹீரோவாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் ஜெயம்ரவி, அடுத்தடுத்து அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இரும்புத்திரை, டார்லிங் போன்ற படங்களுக்கு உதவி இயக்குநர், எழுத்தாளர் என பணியாற்றியுள்ள ஆண்டனி பாக்யராஜ் சைரன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள நிலையில் இசை அசுரன் ஜிவி பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
பத்திரிகையாளர் சந்திப்பு: படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தற்போது நடந்துள்ளது. இதில் ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று படம் குறித்தும் மற்றும் பல விஷயங்களையும் பகிர்ந்தனர். நிகழ்ச்சியில் பேசிய ஜெயம்ரவி யோகிபாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் குறித்து பேசினார். படம் நல்லபடியாக வந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெயம்ரவி, படத்திற்கு வலிமையான பெண் கேரக்டர் தேவைப்பட்டபோது கீர்த்தி சுரேஷ், படத்தில் சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளதாகவும் ஜெயம் ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புலம்பிய சமுத்திரக்கனி: சமுத்திரக்கனியுடன் முதல்முறையாக இந்தப் படத்தின்மூலம் இணைந்துள்ளதாகவும் இந்தப் படத்தில் அவருக்கு மிகவும் வெயிட்டான கேரக்டர் என்றும் ஜெயம்ரவி கூறியுள்ளார். நிஜத்தில் எப்போதும் சமூக கருத்துக்களை பேசிவரும் சமுத்திரக்கனியை இந்தப் படத்தில் நேர்மாறாக நடிக்க வைத்துள்ளதாக ஜெயம் ரவி கூறியுள்ளார். என்னை போய் இப்படி பேச வைக்கிறீங்களே என்று கூறினாலும் தனக்காக அவர் நடிக்க வந்ததாகவும் அருமையாக நடித்துள்ளதாகவும் ஜெயம் ரவி பாராட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி ஜெயம்ரவி குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்.
ஜெயம்ரவிக்கு பாராட்டு: சினிமாவில் எல்லாம் தெரிந்தவர்கள் குறைவுதான் என்று கூறிய சமுத்திரக்கனி, ரவிக்கு எல்லாமே தெரியும் என்றும் அவருக்கான திறமைக்கு இன்னும் பெரிய இடங்கள் காத்திருப்பதாகவும் பாராட்டினார். ஜெயம்ரவியுடன் 100 படங்கள்கூட பண்ணலாம் என்றும் அவர் பாராட்டியுள்ளார். மேலும் இந்தப் படம் ஆம்புலன்ஸ் ஓட்டுபவர்களுக்கு சமர்ப்பணமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜெயம்ரவி உள்ளிட்டவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











