Jayam Ravi: யோகிபாபுவும் நானும் ட்வின்ஸ் மாதிரி.. அழகான ட்ராவல் குறித்து சொன்ன ஜெயம் ரவி!

சென்னை: நடிகர் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சைரன். படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தை அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ளார். படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் ஜெயம்ரவி, சமுத்திரக்கனி, படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு படத்தின் சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

படத்தில் ஜெயம் ரவி இரட்டை கேரக்டர்களில் நடித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள நிலையில், போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவரது கேரக்டர் படத்தில் மிகவும் வெயிட்டாக அமைந்துள்ளதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் கதையின்மீது அதிகமான நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் சமுத்திரக்கனி, யோகிபாபுவின் ரியல் மற்றும் படத்தில் அவர்களது ரீல் கேரக்டர்கள் குறித்தும் ஜெயம் ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Actor Jayam ravi hails Yogi babus character in Siren movie and his binding with him

நடிகர் ஜெயம்ரவி: நடிகர் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சைரன் படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் இருவேறு கேரக்டர்களில் ஜெயம்ரவி நடித்துள்ளார். கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. பொன்னியின் செல்வன் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. இறைவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அவரது சைரன் படம் வெளியாகவுள்ளது.

இருவேறு கேரக்டர்கள்: படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக ஒரு கேரக்டரில் ஜெயம்ரவி நடித்துள்ளார். மேலும் கைதியாகவும் நடித்துள்ளார். இதனால் இந்த தலைப்பு மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். உணர்வுகளை கடத்துவதில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஜிவி பிரகாஷின் இசையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதனிடையே இன்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜெயம்ரவி, ஆண்டனி பாக்கியராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு படத்தின் சுவாரஸ்யங்களை பகிர்ந்தனர்.

தயாரிப்பாளரின் நம்பிக்கை: நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம்ரவி, மிகவும் சந்தோஷமான தருணம் என்று தெரிவித்துள்ளார். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய சைரன் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளதாக கூறிய அவர், நல்ல படங்களுக்கு எப்போதும் ஆதரவு தருவதை போல இந்தப் படத்திற்கும் ஆதரவு தருவீர்கள் என்று ரசிகர்களிடையே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின்மீது தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மிகுந்த நம்பிக்கை வைத்து தயாரித்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு முக்கியமான எமோஷனை கொண்டுவருவதில் ஜிவி பிரகாஷும் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

யோகிபாபு குறித்து நெகிழ்ச்சி: இதனிடையே படத்தில் தன்னுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு குறித்தும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தானும் யோகிபாபுவும் படத்தின் சூட்டிங்கின்போது ட்வின்ஸ் மாதிரி ஒன்றாகவே இருந்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கோமாளி படத்தை போலவே இந்தப் படத்திலும் தங்களுக்குள் அழகான ட்ராவல் இருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.மக்கள் கண்டிப்பாக இதை ரசிப்பார்கள் என்றும் படம் நன்றாக வந்துள்ளதாகவும் கூறிய ஜெயம்ரவி, இயக்குநர்களின் உழைப்புதான் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக உள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X