JR30: ரிலீசுக்கு முன்னதாகவே கல்லா கட்டிய ஜெயம் ரவி -ராஜேஷ் படம்.. எவ்வளவு கோடின்னு பாருங்க!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி -இயக்குநர் எம் ராஜேஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் ஜெஆர்30. பிரியங்கா மோகன் படத்தில் நாயகியாக இணைந்துள்ளார்.
முன்னதாக ஜெயம் ரவியின் அகிலன் படத்தை தயாரித்திருந்த ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.
கடந்த ஆண்டில் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு, தற்போது ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.

ரிலீசுக்கு முன்னதாகவே கல்லா கட்டிய ஜெயம் ரவியின் JR30 படம்: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். அவரது அகிலன், பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 அடுத்தத்த படங்கள் வெளியாகி அவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், அடுத்ததாக இறைவன் படம் இந்த மாத இறுதியில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தனி ஒருவன் படத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த இந்த ஜோடி இறைவன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக இயக்குநர் எம் ராஜேஷுடன் இணைந்து JR30 படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் ஜெயம் ரவிக்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை கடந்த ஆண்டு இறுதியில் போடப்பட்டு, தற்போது விறுவிறுப்பாக சூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் பூஜை ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. படத்தை முன்னதாக ஜெயம் ரவியின் அகிலன் படத்தை தயாரித்திருந்த ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. படம் வரும் டிசம்பரில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நட்ராஜும் இணைந்துள்ளார். மேலும் விடிவி கணேஷ் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். நகைச்சுவையை மையமாக கொண்டு படம் உருவாகி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவியுடன் ஹாரீஸ் ஜெயராஜ் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். ஜெயம் ரவியுடன் அவர் இணைந்துள்ள 4வது படம் இது. ராஜேஷ் படங்களில் எப்போதும் பாடல்கள் ஹிட்டடித்து விடும். அதேபோல இந்தப் படத்திலும் ஹாரீஸ் மேஜிக் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை 37 கோடி ரூபாய்க்கு ஜீ நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தி டப்பிங் மற்றும் இசை ஆகிய உரிமைகளும் 9 மற்றும் 2.5 கோடி ரூபாய்களுக்கு விற்றுத் தீர்ந்துள்ளன. பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே இந்த உரிமைகள் கைமாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்காக செலவழிக்கப்பட்ட பட்ஜெட்டை, ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலேயே படம் கைப்பற்றியுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.

மேலும் ராஜேஷ் -ஜெயம் ரவி காம்பினேஷனில் உருவாகிவரும் இந்தப் படம் திரையரங்குகளிலும் வெளியாகி அதிகமான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி என்றாலே தன்னுடைய பாடி லேங்குவேஜ் உள்ளிட்டவற்றால் அதை சிறப்பாக கொடுப்பவர் ஜெயம் ரவி, இந்தப் படமும் அந்தவகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளன. அவரது அகிலன், பொன்னியின் செல்வன் 2 படங்களில் அதிகமான ரசிகர்களிடம் அவரை கொண்டு சென்ற நிலையில், அடுத்ததாக ரிலீசாகவுள்ள இறைவன் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளன. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெயிலர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சைரன் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications











