Iraivan: அதிரடி படத்தில் அழகான பாடல் -இறைவன் படத்தில் வொர்க் அவுட் ஆன ஜெயம் ரவி -நயன்தாரா கெமிஸ்ட்ரி

சென்னை: நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா கூட்டணியில் உருவாகியுள்ள இறைவன் படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் போக்குக் காட்டி வந்தது.

தனி ஒருவன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனி ஒருவன் 2 படத்திலும் ஜெயம் ரவி -நயன்தாரா இணைவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த சூப்பர் ஹிட் ஜோடி தற்போது இறைவன் படத்திலும் இணைந்துள்ளனர். படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Jayam Ravi -Nayanthara combination Iraivan movie single released

இறைவன் படத்தில் மெலடி பாடல் வெளியீடு: நடிகர் ஜெயம் ரவியின் இறைவன் படத்தை இயக்கி முடித்துள்ளார் அஹமத். முன்னதாக வாமனன், மனிதன் உள்ளிட்ட படங்களை கொடுத்துள்ள அஹமத் -ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள இறைவன் படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது வரும் செப்டம்பர் 28ம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இறைவன் படத்தில் ஜெயம் ரவி -நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. முன்னதாக இவர்கள் இருவரும் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ள நிலையில், இந்த ஜோடி மீண்டும் ஜோடி சேரவுள்ளது. இந்நிலையில் தற்போது இவர்கள் காம்பினேஷனில் இறைவன் படம் அஹமத் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இந்தப் படத்தின் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா, சஞ்சித் ஹெக்டே மற்றும் கரிஷ்மா ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். மெலடி கிங் யுவன் இசையில் இந்தப் பாடல் மெலடியாக ஜெயம் ரவி -நயன்தாராவின் கெமிஸ்ட்ரியை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தனி ஒருவன் படத்திலேயே இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி சிறப்பாக பேசப்பட்டது. தன்னுடைய இலக்கு காரணமாக நயன்தாராவின் காதலை ஏற்காமல் இருப்பார் ஜெயம் ரவி. ஆனாலும் ஒரு கட்டத்தில் அவரது காதலை புரிந்துக் கொள்வார். அவர்களின் காதலை மென்மையாக கூறும் பாடல்கள் அந்தப் படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இந்தப் படத்திலும் அதேபோன்றதொரு சூழலில்தான் ஜெயம்ரவியை கைப்பிடிக்கிறார் நயன்தாரா.

அழகை அழகாய் ஒரு கோப்பையில் ஆரம்பிப்போம் என துவங்கும் இந்தப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியான நிலையிலும், பாடல் மற்றும் அதன் காட்சிகள் இவற்றிற்கு முத்தாய்ப்பாய் யுவனின் இசை என எல்லாம் கலந்த கலவையாக ரசிகர்களை வசீகரிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் ட்ரெயிலர், முன்னதாக வெளியான ராட்சசன், போர் தொழில் போன்ற சைக்கோ படங்களை நியாபகப்படுத்தி, ரசிகர்களை பதைபதைக்க வைத்தது. இந்நிலையில், அதிரடி சைக்கோ த்ரில்லர் படத்தில் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X