ஓய்ந்த விவாகரத்து பஞ்சாயத்து.. கிழியும் ஜெயம் ரவியின் முகத்திரை.. இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்

சென்னை: ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகின்றது. இவரது முதல் படமான ஜெயம் படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியானது. இவரது நடிப்பில் இதுவரை 32 படங்கள் வெளியாகியுள்ளது. தனது முதல் படத்தில் இருந்தே நடிப்பு, நடனம், சண்டை என அனைத்திலும் தொடர்ந்து பாரட்டுகளைப் பெற்று வருபவராக உள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் பிரதர். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு அதாவது அக்டோபர் மாதம் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவியின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவோ அல்லது சுமாராக ஓடிய படங்களாகவோதான் இருந்தது. ஒருகட்டத்திற்கு மேல் காதல் படங்களில் இருந்து அதிரடி ஆக்‌ஷன் படங்களில் ஜெயம் ரவி கவனம் செலுத்தத் தொடங்கினார். அப்படியான படங்களும் சில கைகொடுக்க, ஆக்‌ஷன் ஹீரோவாகவும் காதல் மன்னாகவும் ஜெயம் ரவி வலம் வருகின்றார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சைரன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது என்றாலும், நடுத்தர வயது கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார்.

jayam ravi ganesh k babu

இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் பிரதர். இந்தப் படத்தை சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, அதன் பின்னர் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் எம். ராஜேஸ் இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான பாஸ் என்கின்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்கள் எல்லாம் எவர் க்ரீன் லிஸ்ட்டில் இருக்ககூடிய படங்களாக உள்ளன.

பிரதர் படம்: இயக்குநர் எம். ராஜேஸ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படமாக பிரதர் படம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், நட்டி, பூமிகா, சீதா, அச்யுத், 'பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள மக்கா மிஷி பாடல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

jayam ravi ganesh k babu

விவாகரத்து: படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அப்போது படம் குறித்து படக்குழுவினர் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதில் ஜெயம் ரவி இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜுடன் இணைந்து நடனம் ஆடினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்திருந்தார். இசை வெளியீட்டு விழா முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தேவையில்லாதவற்றை யாரும் பேசவேண்டாம் எனத் தெரிவித்திருந்தார்.

jayam ravi ganesh k babu

கிழிந்த முகத்திரை: இந்த நிகழ்வு நடந்து ஒரு வார காலத்திற்குள் மும்பைக்குச் சென்ற ஜெயம் ரவி அங்கேயே தங்கி வருகின்றார் எனக் கூறப்படுகின்றது. மேலும் பாலிவுட் படத்திலும் கமிட் ஆகியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் டாடா படத்தினை இயக்கிய இயக்குநர், கணேஷ் கே. பாபுவின் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இயக்குநர் கணேஷ் கே. பாபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காததால், இப்போதைக்கு JR 34 என பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைக்கவுள்ளார். மேலும் இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் ஜெயம் ரவியின் முகம் கிழிந்துள்ளதைப்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X