Jayam Ravi: ஜெயம் ரவியின் கால்ஷீட் பிரச்சினை.. தொடர்ந்து தள்ளிப்போகும் காதலிக்க நேரமில்லை சூட்டிங்!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்துக் கொண்டு நடித்து வருகிறார். கடந்தாண்டில் இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகின. இதில் பொன்னியின் செல்வன் 2 படம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக கை கொடுத்தது. ஆனால் இறைவன் படம் சொதப்பியது. இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர்.
ஜெனீ, பிரதர், காதலிக்க நேரமில்லை என அடுத்தடுத்த படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். கமல்ஹாசனுடன் ஜெயம் ரவி நடிக்கவிருந்த தக் லைஃப் படத்திலிருந்து அவர் விலகியுள்ளார். இந்நிலையில் இன்று முதல் பெங்களூரில் காதலிக்க நேரமில்லை படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங்கை நடத்தி விரைவில் நிறைவு செய்ய படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் ஜெயம் ரவி: ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் என அடுத்தடுத்த படங்கள் வெளியானது. இதில் பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது, ஆனால் சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இறைவன் படம் சொதப்பியது. படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சைரன் படத்தில் நடித்திருந்தார் ஜெயம் ரவி. இந்தப் படமும் எதிர்பார்த்த அளவில் கைக்கொடுக்கவில்லை.
அடுத்தடுத்த படங்கள்: இதனிடையே, அடுத்தாக எம் ராஜேஷுடன் பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜெனீ உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். காதலிக்க நேரமில்லை படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கிவருகிறார். படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வருகிறது. ரொமான்டிக் காமெடி படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். மேலும் யோகிபாபு, வினய் ராய், லால், ஜான் கொக்கன், டிஜே பானு, லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தக் லைஃப் படத்திலிருந்து விலகிய ஜெயம் ரவி: கால்ஷீட் பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து இந்த படம் பல வாரங்களாக சூட்டிங் நடத்தப்படாமல் இருந்தது. முன்னதாக கமல்ஹாசனின் தக் லைஃப் படதிற்காக ஜெயம் ரவி கொடுத்த கால்ஷீட் வீணடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்திலிருந்து ஜெயம் ரவி விலகியுள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் தன்னை கமிட் செய்து கொண்டு நடித்து வரும் ஜெயம் ரவி, இன்று முதல் காதலிக்க நேரமில்லை படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். தொடர்ந்து இந்த படத்திற்கு பத்து நாட்கள் அவர் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் இதையடுத்து விரைவில் இந்த படத்தின் சூட்டிங் நிறைவு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரில் ஷூட்டிங்: காதலிக்க நேரமில்லை படத்தின் ஷூட்டிங் தற்போது பெங்களூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சூழலில் அதில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இருவரும் கட்டி தழுவிக் கொண்டு இருப்பதாக காணப்பட்டது. இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சூழலில் படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். கிருத்திகா உதயநிதி முன்னதாக வணக்கம் சென்னை மற்றும் காளி படங்களின்மூலம் அதிகமான கவனத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் அவரது காதலிக்க நேரமில்லை படம் எத்தகைய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











