எனக்கும் ஆசையாதான் இருக்கு.. ஜெயம் ரவிக்கே இந்த நிலைமையா?.. தனி ஒருவன் 2 அப்டேட்!
சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்தடுத்து பிரதர், ஜெனீ, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு காத்திருக்கின்றன. இந்த படங்களில் முதலாவதாக எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜெயம் ரவி மற்றும் படத்தின் இயக்குனர் எம் ராஜேஷ் பங்கேற்று வருகின்றனர். இந்தப் படத்தின் இசை வெளியீடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், ஜெயம் ரவி பங்கேற்ற பேட்டி ஒன்றில் தனி ஒருவன் 2 படம் குறித்து அவர் அப்டேட் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான சைரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அப்பா மற்றும் மகள் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக கொண்டு உருவாகியிருந்த இந்தப் படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். மிகவும் அழுத்தமான கதைக்களத்தில் இந்தப் படம் ரிலீசானது. இதனிடையே, தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இதில் முதலாவதாக எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது.
பிரதர் படம்: தீபாவளி ரேசில் அமரன், பிளடி பெக்கர் படங்களுடன் ஜெயம் ரவியின் பிரதர் படமும் இணைந்துள்ளது. படத்தின் இசை வெளியீடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் படத்தின் இயக்குனர் எம் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஜெயம் ரவி தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளார். அவரது இந்த முடிவையொட்டி அவர் அடுத்தடுத்த விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் முன்னதாக அவர் இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் அதிகமாக பங்கேற்காத நிலை காணப்பட்டது.
தனி ஒருவன் 2 குறித்து ஜெயம் ரவி: எப்போதுமே தன்னுடைய படங்களின் பிரமோஷன்களில் ஜெயம் ரவி அதிகமாக பங்கேற்பார். இதற்கு சிறப்பான உதாரணம் பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள். இதனிடையே அவர் தற்போது பிரதர் படத்திற்காக அடுத்தடுத்து promotionகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பேட்டி ஒன்றில் பேசிய ஜெயம் ரவி, பிரதர் படம் குறித்த பல்வேறு சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டார். ஆயினும் அவரது நீண்ட கால எதிர்பார்ப்பு படமான தனி ஒருவன் 2 படம் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவர் கண்டிப்பாக தனி ஒருவன் 2 படம் உருவாக உள்ளதாக தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஸ்லோவான வேலைகள்: தனி ஒருவன் படம் குறித்து அனைவரும் கேட்பதாகவும் தற்போதும் படம் பிராசசிங்கில் உள்ளதாகவும் ஆனால் அதன் ப்ராசஸ் மெதுவாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தானும் இந்த படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்களை சொல்வதற்காக ஆசையாக காத்திருப்பதாகவும் ஜெயம் ரவி கூறியுள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனி ஒருவன் 2 படத்திற்காக தானும் தயாராகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனி ஒருவன் படத்தை ஜெயம் ரவியின் அண்ணனும் பிரபல இயக்குனருமான மோகன் ராஜா இயக்கியிருந்தார்.
காத்திருக்கும் ரசிகர்கள்: தனி ஒருவன் படத்தில் நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். மிகச் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் படம் பெற்றிருந்தது. அது முதலே, படத்தின் இரண்டாவது பாகம் குறித்து பல வருடங்களாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், தற்போது வரை இந்த படத்தின் சூட்டிங் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் ரசிகர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











