5 வருஷத்துக்கு முன்னாடியே கிருத்திகா கதையை சொல்லிட்டாங்க.. நான் 50 - 50 கேட்டேன்.. ஜெயம்ரவி ஓபன்!
சென்னை: நடிகர் ஜெயம்ரவி, நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் கூடுதல் பலமாக அவரது இசை அமைந்துள்ளது. குறிப்பாக இழு இழு இழுக்குதடி பாடல் ரசிகர்களை அதிகமாக இழுத்துதான் வருகிறது.

காதலிக்க நேரமில்லை படம்: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசையில் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மிகச்சிறப்பான வைபை ரசிகர்களிடையே கொடுத்துள்ளது. குறிப்பாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இழு இழு இழுக்குதடி பாடலை பாடகி தீயுடன் இணைந்து இசைப்புயல் பாடியிருந்தார். இந்தப் பாடல் ஏராளமான ரீல்ஸ்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு காதல்தான் பிரதானம் என்றபோதிலும் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கதைக்களமாக கொண்டுள்ளார் கிருத்திகா உதயநிதி. இதனிடையே 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் ஒன் லைனை கிருத்திகா தன்னிடம் கூறிவிட்டதாக ஜெயம்ரவி தெரிவித்துள்ளார்.
50 -50 கேட்ட ஜெயம்ரவி: பெண் இருக்குநராக இருந்த கிருத்திகா, படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்தே கதைக்களத்தை உருவாக்கியிருந்ததாகவும் இதையடுத்து அவரிடம் தான் ஒரு கோரிக்கையை வைத்ததாகவும் ஜெயம்ரவி தெரிவித்துள்ளார். தனக்கு அதிகமாக வேண்டாம் என்றும் சமமான கேரக்டர் வேண்டும் என்று தான் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கதை தனக்கு மிகவும் பிடித்திருந்த நிலையில், 40 -60 என இருந்ததை 50 -50 என பண்ணுமாறு தான் அவரிடம் கோரியதாகவும் அதை அவர் ஒப்புக் கொண்டதாகவும் ஜெயம்ரவி தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
படத்தில் பைட் இல்லை: இதையடுத்து கிருத்திகா அடுத்தடுத்த படங்களில் தன்னை கமிட் செய்துக் கொண்டதாகவும் தனக்காக இல்லாமல், கதைக்கு தேவையான அளவில் கதைக்கள்ததை அவர் மாற்றியதாகவும் ஜெயம்ரவி தெரிவித்துள்ளார். இந்தக் கதைக்களத்தில் இருந்து தன்னுடைய எண்ணத்தை மாற்றி வேறு கதைக்களத்திற்கு சென்ற கிருத்திகா, அதையடுத்து பிரெஷ்ஷாக இந்தக் கதையை மாற்றியதாகவும் இதற்காக மற்றவர்களிடம் அவர் ஆலோசனை மேற்கொண்டதாகவும் ஜெயம்ரவி குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்தே தற்போதைய கதைக்களம் உருவாகியுள்ளதாகவும் படத்தில் தனக்கு பைட் கிடையாது என்றும் ஜெயம்ரவி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications