பணம்தான் பிரச்னையா?.. சந்தோஷமாக இருக்க முடியாது. விவாகரத்துக்கு பிறகு போட்டுடைத்த ஜெயம் ரவி

சென்னை: கோலிவுட்டின் கடந்த மாத ஹெட்லைன்ஸ் என்றால் அது ஜெயம் ரவிதான். காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதனையடுத்து பலரும் இதற்கு என்ன காரணம் என்று ஆராய தொடங்கினார்கள். ஆனால் ரவியின் விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என்று கூறினார். மேலும் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. இந்தச் சூழலில் ஜெயம் ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

ஜெயம் ரவி கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவர். தான் நடித்த முதல் படமான ஜெயம் தொடங்கி கதை தேர்வில் தொடர்ந்து தனித்த கவனம் செலுத்திவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றாலும் ரவியின் நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பே கிடைத்தது. இப்போது அவர் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்திருக்கிறார். படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

jayam ravi aarthi brother

மனைவியுடன் விவாகரத்து: சூழல் இப்படி இருக்க தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த மாதம் அறிவித்தார் ரவி. ஆனால் ரவியின் விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என்று ஆர்த்தி விளக்கமளித்தார். அதெல்லாம் இல்லை அவருக்கு முன்கூட்டியே தெரியும் என்று ரவி கூறினார். இதற்கிடையே ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கும் தொடர்பு இருப்பதால்தான் இந்த விவாகரத்து நடந்ததாகவும் ஒரு தகவல் ஓடியது. அதனையடுத்து கெனிஷாவும் கொந்தளித்து தனக்கும் ரவிக்கும் தவறான தொடர்பு எதுவும் இல்லை என்று கெனிஷா கூறினார்.

ரவி பேட்டி: மேலும் வீட்டில் தான் அவமானப்படுத்தப்பட்டேன் என்றும் ரவி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் சமீபத்தில் கலாட்டா யூடியூப் சேனலுக்கு ஜெயம் ரவி அளித்த பேட்டியில், "எனது அப்பா நிறைய பணத்தை நான் சின்ன வயதாக இருக்கும்போது வீட்டுக்கு கொண்டு வருவார். அதனால் பணத்தின் மீது பெரிய ஈடுபாடு இல்லாமலேயே போய்விட்டது. அதேசமயம் பணம் தேவையே இல்லை என்றும் யாரும் கூற முடியாது. எவ்வளவு பணம் இருந்தால் ஒருவர் சந்தோஷமாக இருப்பார் என்ற கேள்விதான் இங்கு முக்கியமானது.

சந்தோஷமாக இருக்க முடியாது: சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்றால் பணம் எவ்வளவு வந்தாலும் ஒருவரால் சந்தோஷமாக இருக்க முடியாது. இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். பத்து ரூபாய் இருந்தால் அதற்கேற்றவாறு செலவு ஆகும். பத்து கோடி ரூபாய் இருந்தால் அதற்கேற்றபடி செலவு ஆகும். வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்னைகள் வரலாம். ஏன் அது ரிலேஷன்ஷிப் சம்பந்தமாகக்கூட பிரச்னை வரலாம்.

குப்பைக்குள் தேட வேண்டாம்: அப்படி ஒரு பிரச்னை வரும்போது முதலில் அந்த ரிலேஷன்ஷிப்பிலிருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும். ஏதோ ஒன்றை குப்பைக்குள் தேட வேண்டுமென்றால் அது எங்கே இருக்கும் என்ற தெளிவு முதலில் வேண்டும். அந்தத் தெளிவு இல்லாமல் நாம் தேடிக்கொண்டே இருந்தால் தேடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அதனால் கொஞ்சம் தனியாக அமர்ந்து இங்குதான் போட்டோம்; எங்கே இருக்க வாய்ப்புண்டு; எவ்வளவு அழுத்தத்தில் அதை போட்டோம்; ரொம்ப ஆழமாக போயிருக்குமோ என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டு தேட ஆரம்பித்தால் அழுத்தமே இருக்காது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X