Jayam ravi: நான் டைரக்ட் பண்ணா விஜய் சேதுபதிதான் ஹீரோ.. டேட்ஸ்க்கு அப்ளிகேஷன் போட்ட ஜெயம்ரவி!
சென்னை: நடிகர் ஜெயம்ரவியின் இறைவன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் ஹெச் வினோத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம்ரவி, தன்னுடைய இயக்குநராகும் ஆசையை வெளிப்படுத்தினார்.

விஜய் சேதுபதியை இயக்க விருப்பம் தெரிவித்த ஜெயம் ரவி: நடிகர் ஜெயம்ரவி தன்னுடைய சகோதரர் மற்றும் இயக்குநர் இயக்கத்தில்தான் தன்னுடைய முதல் படமான ஜெயம் படத்தில் நடித்தார். இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்க அடுத்தடுத்த தன்னுடைய அண்ணன் இயக்கத்திலும் பல்வேறு முன்னணி இயக்குநர்கள் இயக்கத்திலும் நடித்துள்ளார். சாக்லேட் பாயாக தன்னுடைய கேரியரை துவங்கிய இவர், ஒரு கட்டத்தில் பேராண்மை உள்ளிட்ட படங்களில் ஆக்ஷன் அவதாரமும் எடுத்துள்ளார்.
தற்போது அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்துவரும் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக இறைவன் படம் வெளியாகவுள்ளது. வரும் 28ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம்ரவி மிகவும் துடிப்புடன் மேடையில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் ஹெச் வினோத் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். இதனால் நிகழ்ச்சி களைகட்டியது. லோகேஷ் கனகராஜூம் பங்கேற்கவிருந்த சூழலில், லியோ படத்தின் வேலைகள் காரணமாக அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, முன்னதாக போகன் படத்தில் ஜெயம்ரவியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் கால்ஷீட் பிரச்சினையால் அதில் நடிக்க முடியாமல் போனதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
சரியான கதைக்களம் அமைந்தால் ஜெயம்ரவியுடன் இணைந்து நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஜெயம்ரவி, தான் இயக்குநராக நினைத்தபோது, முதலில் தன்னுடைய நினைவில் வந்தவர் விஜய் சேதுபதிதான் என்று கூறினார். இதன்மூலம் அவர் தனது இயக்குநர் கனவை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தான் படமியக்கினார் விஜய் சேதுபதியின் கால்ஷீட் தனக்கு வேண்டும் என்றும் மேடையிலேயே தன்னுடைய அப்ளிகேஷனை விஜய் சேதுபதியிடம் போட்டார்.
கோலிவுட்டில் நடிகர்களும் இயக்குநராகி தங்களது கெத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல பிரபல இயக்குநர்கள் செல்வராகவன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பை தேர்ந்தெடுத்து பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றனர். ப பாண்டி படத்தை இயக்கிய தனுஷ் தற்போது டி50 படத்தை இயக்கி வருகிறார். இதேபோல பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கியுள்ளார் விஜய் ஆண்டனி. இவர்கள் வரிசையில் இடம்பெறும் ஆசை தற்போது ஜெயம் ரவிக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











