ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிரடி விருந்து.. அகிலன் படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் கடந்த ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் அடுத்தபாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாகவுள்ளது.

முன்னதாக அவரது நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், பல விஷயங்களை அதில் ஜெயம் ரவி பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி எப்போதுமே இயக்குநர்களின் பேவரிட். இதற்கு காரணம் இவரது படங்கள் அனைத்துமே மினிமம் வெற்றிக்கான கியாரண்டியை கொடுத்து வருவதுதான். ஜெயம் என்ற படத்தில் துவங்கிய ஜெயம் ரவியின் வெற்றிப் பயணம் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது.

பொன்னியின் செல்வன் 2 படம்

பொன்னியின் செல்வன் 2 படம்

இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை மட்டுமில்லாமல் வசூலையும் பெற்றுள்ள நிலையில், படத்தின் அடுத்த பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் விரைவில் துவங்கவுள்ளது. முதல் பாகத்தில் ஜெயம் ரவிக்கு அதிகமான காட்சிகள் இல்லாத நிலையில், இந்த பாகத்தில் அவருக்கு அதிகமான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகிலன் ரிலீஸ்

அகிலன் ரிலீஸ்

இதனிடையே, பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு முன்னதாக ஜெயம் ரவியின் அகிலன் படம் வரும் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் என இரு நாயகிகள் ஜெயம் ரவியுடன் இணைந்துள்ள நிலையில், படத்தில் ஜெயம் ரவி கேங்ஸ்டராகவும் பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கேங்ஸ்டராக நடிக்கும் ஜெயம் ரவி

கேங்ஸ்டராக நடிக்கும் ஜெயம் ரவி

அகிலன் படத்தின் கதைக்களம் துறைமுகத்தையும் அதையொட்டிய கடத்தலையும் கொண்டதாக உள்ள நிலையில், அதிகப்படியான காட்சிகள் தூத்துக்குடி மற்றும் சென்னை காசிமேடு ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிரடியான ஜெயம் ரவியை பார்க்க முடியும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தப் படத்திற்காக அதிகமாக மெனக்கெட்டதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

அகிலன் படத்தின் ஸ்னீக் பீக்

அகிலன் படத்தின் ஸ்னீக் பீக்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இதில் கலக்கலான காஸ்ட்யூமில் கலந்துக்கொண்ட ஜெயம் ரவி, அகிலன் படம் குறித்தும் தனது முந்தைய படமான கோமாளி படம் குறித்தும் அதன் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் வளர்ச்சி குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். இதனிடையே இந்தப்படத்தின் மிரட்டலான ஸ்னீக் பீக்கை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X