இந்திய பெருங்கடலின் ராஜா... வெளியானது ஜெயம் ரவியின் 28வது பட டைட்டில்!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

முன்னதாக பூமி படத்தில் நடித்துள்ள இவர் தற்போது தனது 28வது படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். சமூக அக்கறை இவரது படங்களில் காணப்படும். அதே சமயம் குறும்புடனான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் முன்னதாக பூமி படம் வெளியானது. இந்தப் படம் சிறப்பாக அமைந்திருந்தது.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

இந்நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரவி. சரித்திரப்படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அதே நேரத்தில் பூலோகம் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் தனது 28வது படத்தின் சூட்டிங்கையும் ஏறக்குறைய முடித்துள்ளார்.

பூலோகம் இயக்குநருடன் ஜெயம் ரவி

பூலோகம் இயக்குநருடன் ஜெயம் ரவி

பூலோகம் படம் இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், தற்போது இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படத்தில் அவருக்கு பிரியா பவானி சங்கர் ஜோடி சேர்ந்துள்ளார். நடிகை தான்யா ரவிச்சந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மே மாதம் ரிலீஸ்?

மே மாதம் ரிலீஸ்?

ஆக்ஷன் அதிரடி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைவில் முடித்து படத்தை வரும் மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

டைட்டில் அறிவிப்பு

டைட்டில் அறிவிப்பு

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு அகிலன் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் கிங் ஆப் தி இந்தியன் ஓஷன் என்றும் சப் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி கேங்ஸ்டராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆக்ஷன் படங்களில் ஜெயம் ரவி

ஆக்ஷன் படங்களில் ஜெயம் ரவி

ஜெயம் ரவி படத்திற்கு பிறகு காதல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவந்த ஜெயம் ரவி பேராண்மை படத்திற்கு பிறகு அதிகமாக ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்தினார். தனி ஒருவன், பூலோகம், அடங்கமறு உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தது. தற்போது மீண்டும் ஆக்ஷன் அவதாரத்தையே எடுத்துள்ளார் ரவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X