விவசாயத்தை போற்றும் ஜெயம் ரவியின் பூமி - பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 25ஆவது படத்திற்கு பூமி என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் விவசாயம் சம்பந்தப்பட்ட படமாகும். அதற்கான அதிகாரபூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான கோமாளி படத்தின் வெற்றிக்கு பிறகு லக்ஷ்மன் இயக்கத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அதை விட சிறப்பு என்னவென்றால் இது ஜெயம் ரவியின் 25ஆவது படமாகும். இப்படம் விவசாயம் சம்பந்தப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Jayam Ravi’s New Film Bhoomi

இயக்குனர் லக்ஷ்மன் இதற்கு முன் இரு படங்கள் இயக்கி உள்ளார். ரோமியோ ஜுலியட் மற்றும் போகன் ஆகும். இரண்டுமே ரவியின் படங்கள் இரண்டுமே நல்ல வெற்றி கண்ட படங்கள். இதனாலேயே ஜெயம் ரவி தனது 25ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை லஷ்மனுக்கு வழங்கியுள்ளார்.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜெயம் ரவியால் வெளியிடப்பட்டது.

இந்த படத்திற்கு பூமி என்ற தலைப்பு வைக்கபட்டுள்ளது. ஜெயம் ரவி பல்வேறு மாறுபட்ட கதை தளத்தில் நடித்து பழக்கப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அது போல் பேராண்மை, தாம் தூம், ஆதி பகவான், நிமிர்ந்து நில், தனி ஒருவன், பூலோகம், மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களில் மாறுபட்ட பல கோணங்களில் நடித்துள்ளார். அதே மாதிரி, தற்போது பூமி படத்திலும் மாறுபட்ட கதை களத்திலேயே நடித்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இந்தி நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். இந்த படத்தை ஜெயம் ரவியின் உறவினரான சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மேக்கர்ஸ் நிறுவனத்தினர் தயாரித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைக்கிறார் டி.இமான். டி.இமான் தனது 100ஆவது பட இசையையும் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்திற்காக செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பாடல் வரிகள் எழுத உள்ளனர் மதன் கார்கியும் தாமரையும். பிருந்தா மாஸ்டர் நடன இயக்குனராக படத்தில் இணைந்துள்ளார். இப்படியிருக்க இவரின் 25ஆவது படம் மிக பெரிய எதிர்பார்பை எற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையில் ஜெயம் ரவி தனது 26ஆவது படத்தையும் தேர்வு செய்து விட்டார் என்று கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த படத்தை என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் படங்களை இயக்கிய அஹமத் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரியில் அஹமத் படத்தின் வேலைகள் துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X