சால்ட் & பெப்பர் தோற்றத்தில் வெளியான ஜெயம் ரவியின் புகைப்படம்.. ரசிகர்கள் ஷாக்!
சென்னை : நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
தற்போது அகிலன் படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2 படமும் ரிலீசாக உள்ளது.

நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி எப்போதுமே மினிமம் கேரண்டி சக்சஸ் ஹீரோ என்ற சிறப்புடன் கோலிவுட்டில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார். ஜெயம் படத்தில் துவங்கிய இவரது பயணம், பல கெட்டப்புகளில் இவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படம்
இந்தப் படத்தில் இவரது கேரக்டர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது. படத்தில் த்ரிஷாவிற்கு தம்பியாக நடித்திருந்தார் ஜெயம் ரவி. இந்தப் படம் ஜெயம் ரவிக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ப்ரமோஷன் பணி
இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் விரைவில் ஜெயம் ரவி, படத்தின் மற்ற நடிகர்களுடன் இணையவுள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த அகிலன் படம் வரும் மார்ச் 10ம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகிலன் படத்தின் ரிலீஸ்
இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகளிலும் விரைவில் ஜெயம் ரவி ஈடுபடவுள்ளார். இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் அழகான இளவரசன் கேரக்டரில் தோன்றிய ஜெயம் ரவியா இது என்ற கேள்விகளை இந்தப் புகைப்படம் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்தடுத்த படங்களில் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்ததாக இறைவன், சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அடுத்ததாக தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











