அருண்மொழி வர்மனாக மாறிய ஜெயம் ரவி.. அழகான தருணங்களை வீடியோவாக வெளியிட்ட படக்குழு!

சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் 2.

இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டடித்தது.

இதனிடையே வரும் ஏப்ரல் 28ம் படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசாகவுள்ளது. இதையொட்டிய பிரமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியானது பொன்னியின் செல்வன் படம். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகியிருந்த இந்தப் படம் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக வெளியானது. ரசிகர்களையும் கவர்ந்தது.

கோடை கொண்டாட்டம்

கோடை கொண்டாட்டம்

பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வன் படம் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று அதிகமான வசூலையும் குவித்தது. ஒரேகட்டமாக இந்தப் படத்தின் இரண்டு பாகங்களின் சூட்டிங்கையும் மணிரத்னம் முடித்த நிலையில் சில மாதங்களிலேயே தற்போது கோடை கொண்டாட்டமாக படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

பிரமோஷனை துவக்கிய படக்குழு

பிரமோஷனை துவக்கிய படக்குழு

இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழுவினர் முன்னதாகவே துவக்கியுள்ளனர். படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் நடிகர்களின் கேரக்டர் மாற்றத்திற்காக பின்புலத்தில் உழைத்தவர்களின் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அவர்களின் ஒவ்வொரு காஸ்ட்யூமிற்காகவும் வரைபடங்களின் உதவியுடன் அவர்கள் மெனக்கெட்டது இந்த வீடியோவில் பகிரப்பட்டது.

 அருண்மொழி வர்மனாக மாறிய ஜெயம் ரவி

அருண்மொழி வர்மனாக மாறிய ஜெயம் ரவி

அந்த வகையில் குந்தவையாக மாறிய த்ரிஷா, வந்தியத்தேவனாக மாறிய கார்த்தி, ஆதித்த கரிகாலனாக மாறிய விக்ரம் ஆகியோரின் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் இன்றைய தினம் அருண்மொழி வர்மனாக நடிகர் ஜெயம் ரவி உருமாற பின்புலத்தில் உழைத்தவர்கள் குறித்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அவரின் கேரக்டர் சிறப்பாக அமைய காரணமானவர்களை ரசிகர்கள் இந்த வீடியோ மூலம் அறிந்துக் கொள்ள முடிந்தது. அவரின் அடுத்தடுத்த கெட்டப் மாற்றங்களின் புகைப்படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த வீடியோ

ரசிகர்களை கவர்ந்த வீடியோ

ஒரு கேரக்டருக்காக ஒவ்வொரு படத்திலும் ஏராளமானவர்கள் உழைக்க வேண்டியுள்ளது. அதிலும் வரலாற்று பின்புலத்துடன் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இத்தகைய வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த வீடியோவில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வரும் 29ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டில் கமல், ரஜினி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

ஆடியோ வெளியீட்டில் விஜய் பங்கேற்பு?

ஆடியோ வெளியீட்டில் விஜய் பங்கேற்பு?

அதேபோல பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டிலும் ரஜினி, கமல் இவர்களுடன் நடிகர் விஜய்யும் கலந்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கேற்றாற்போல கடந்த 50 நாட்களாக லியோ படத்தின் சூட்டிங்கிற்காக காஷ்மீரில் இருந்த விஜய், தற்போது அந்த ஷெட்யூலை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார். இதையடுத்து பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X