Aarthi Ravi :நான் தான் அடிக்கடி சண்டை போடுவேன்.. ஜெயம்ரவி குறித்து மனம் திறந்த ஆர்த்தி!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இருவருக்கும் கடந்த 2009ம் ஆண்டில் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், டிக் டிக் டிக் படத்தில் இவரது மூத்த மகன் ஆரவ் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் மனமொத்த தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இதனிடையே, சமீபத்திய பேட்டியில் ஜெயம்ரவி குறித்த பல்வேறு விஷயங்களை ஆர்த்தி பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Actor Jayam ravis wife Aarthi ravi shares many things about his husband in her recent interview

ஜெயம்ரவி குறித்து மனம்திறந்த ஆர்த்தி ரவி :

நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து ஜெயம் படத்திலிருந்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் தன்னுடைய அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடித்துவந்த ஜெயம் ரவி, அடுத்தடுத்த இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் அகிலன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் ரிலீசாகின. இதில் அகிலன் கலவையான விமர்சனங்களை பெற்றது. பொன்னியின் செல்வன் 2 படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் படத்தின் பிரம்மாண்டம் மற்றும் மணிரத்னத்தின் இயக்கம் ஆகியவை படத்திற்கான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கேரக்டரில் டைட்டில் கேரக்டரில் நடித்திருந்தார் ஜெயம் ரவி. இந்தப் படம் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் படைப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நிலையில், அந்தக் கேரக்டர் குறித்த ஒரு பிம்பத்தை ஜெயம் ரவி அந்தக் கேரக்டருக்கு கொடுத்திருந்தார். இந்தப் படம் வசூல்ரீதியாக சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களை கவரவும் இந்தப் படம் தவறவில்லை.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஜெயம்ரவி கமிட்டாகி நடித்து வருகிறார். விரைவில் தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்கவுள்ளார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விரைவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம்ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர்.

Actor Jayam ravis wife Aarthi ravi shares many things about his husband in her recent interview

இதனிடையே ஜெயம் ரவி குறித்த பல்வேறு விஷயங்களை அவரது மனைவி ஆர்த்தி ரவி, தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். தன்னுடைய கணவர் மிகவும் யதார்த்தமானவர் என்று கூறியுள்ள ஆர்த்தி, அவரால் வீட்டில் சண்டை வராது என்றும், தன்னால்தான் அடிக்கடி சண்டை வரும் என்றும் தெரிவித்துள்ளார். அவரால் சண்டை வந்தால், சில மணிநேரங்களிலேயே ரவி பேசி விடுவார் என்றும், ஆனால் தான் சண்டையை ஒரு வாரத்திற்கு நீட்டி விட்டுவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

ஜெயம் ரவி சண்டை போடுவதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு அவர் மிகவும் அமைதியானவர் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, தொடர்ந்து பேசிய ஜெயம்ரவி, நம்மீது தவறு இல்லையென்றாலும் நாம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என்றும் அதுதான் உண்மையான காதல் என்றும் தெரிவித்துள்ளார். தான் எது செய்தாலும் தன்னுடைய மனைவியிடம் அதை உடனடியாக ஷேர் செய்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X