விரைவில் இயக்குநராக மாறும் ஜெயம் ரவி.. அடுத்தடுத்து இரண்டு படத்தை இயக்குறாராம்!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் படம் வெளியாகவுள்ளது.

தொடர்ந்து அகிலன், இறைவன், சைரன் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

விரைவில் தன்னுடைய அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாகதாக தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் ஜெயம் படத்தில்தான் முதலில் அறிமுகமானார். அந்தப்படத்தில் இவருடைய இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். இவரை மிகவும் மெச்சூர்ட்டான கேரக்டர்களிலும் நகைச்சுவை அதிகமான கேரக்டர்களிலும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

இந்த இரண்டு கேரக்டர்களும் இவருக்கு சிறப்பாகவே பொருந்துகிறது. தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்துவரும் ஜெயம்ரவி கோமாளி படத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் படங்கள் வெளியாகாமல் இருந்தார். இந்நிலையில் இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் அடுத்ததாக வெளியாகவுள்ளது.

அருள்மொழி வர்மனாக ஜெயம்ரவி

அருள்மொழி வர்மனாக ஜெயம்ரவி

இந்தப் படத்தில் பெரிய சாம்ராஜ்யத்தை சேர்ந்த இளவரசன் அருள்மொழி வர்மனாக நடித்து வருகிறார். படத்தில் இவருடைய சகோதரியாக குந்தவை என்ற கேரக்டரில் த்ரிஷா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் முன்னதாக ஜோடி போட்டு நடித்துள்ள நிலையில், தற்போது சகோதரன் -சகோதரியாக நடித்து வருகின்றனர்.

3 படங்களில் நடித்துவரும் ஜெயம்ரவி

3 படங்களில் நடித்துவரும் ஜெயம்ரவி

இந்தப் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் உருவாகி வருகின்றன. அகிலன், இறைவன் மற்றும் சைரன் என 3 படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. இதில் இறைவன் படத்தில் இவருடன் நயன்தாரா இணைந்துள்ளார்.

விரைவில் தனி ஒருவன் 2

விரைவில் தனி ஒருவன் 2

விரைவில் தன்னுடைய அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக ஜெயம்ரவி தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2015ல் வெளியான தனி ஒருவன் படத்தில் ஜெயம்ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடித்து சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில், அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இயக்குநர் ஆசை

இயக்குநர் ஆசை

இந்நலையில் தனக்கும் இயக்குநராகும் ஆசை உள்ளதாகவும் இதற்காக இரண்டு ஸ்கிரிப்ட்களை தான் தயாரித்துள்ளதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இதில் ஒன்றில் தான் நடிக்கவுள்ளதாகவும் மற்றொரு கதையில் வேறொரு நடிகர் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயக்குநராக சாதிப்பாரா?

இயக்குநராக சாதிப்பாரா?

எப்போதுமே ஜெயம் ரவியின் நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் அவர் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அண்ணன் சிறப்பான இயக்குநராக உள்ள நிலையில் ஜெயம்ரவி இயக்குநராக சாதிப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X