Jayam Ravi: உண்மையான வதந்திகள்.. யார் நலனுக்காக ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்தார்?
சென்னை: நடிகர் ஜெயம் ரவி -ஆர்த்தி தம்பதி தங்களின் பிரிவு முடிவை அறிவித்துள்ளனர். நீண்ட காலங்களாகவே இந்த வதந்தி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வந்த நிலையில், இன்றைய தினம் தன்னுடைய அறிவிப்பின்மூலம் இதை நிஜமாக்கியுள்ளார் ஜெயம் ரவி. கசப்பான இந்த முடிவை தன்னுடைய சொந்த முடிவாக தான் எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளை கடந்து சினிமாவில் வெற்றிப்பட நாயகனாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. வித்தியாசமான கதைக்களங்களில் நடித்துவரும் ஜெயம் ரவிக்கு முதல்படமான ஜெயம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து பேராண்மை உள்ளிட்ட படங்கள் மூலம் தன்னை ஆக்ஷன் ஹீரோவாகவும் மாற்றிக் கொண்டார்.

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி ஜெயம் படத்தில் ஆரம்பித்த தன்னுடைய திரைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் வித்தியாசமான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில் மினிமம் கேரண்டி ஹீரோவாக பல ஆண்டுகளாக கோலிவுட்டில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஜெயம் ரவியின் துவக்க கால படங்கள் காதல், சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளிவந்த நிலையில் பேராண்மை உள்ளிட்ட சில படங்கள் மூலம் தன்னை அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகவும் மாற்றிக் கொண்டார் ஜெயம் ரவி. இந்நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிரடி முடிவெடுத்துள்ளார் ஜெயம் ரவி.

நெஞ்சம் கசந்த முடிவு என வருத்தம்: ஆர்த்தி என்பவரை ஜெயம் ரவி காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். 15 ஆண்டுகால தங்களது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவை தற்போது ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். நெஞ்சம் கசந்த தன்னுடைய வாழ்க்கையின் தனிப்பட்ட தகவலை தான் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்வதாக ஜெயம் ரவி அறிக்கை மூலம் ஆர்த்தியுடனான தன்னுடைய பிரிவை அறிவித்துள்ளார். நீண்ட காலங்களாக யோசித்து, பல்வேறு பரிசீலனைகளுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
உண்மையான வதந்திகள்: கோலிவுட்டின் அழகான மற்றும் ஆதர்ச தம்பதிகளாக இருந்து வந்தனர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி. ஆனால் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் பிரியவுள்ளதாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இது யூகங்களாகவே ரசிகர்களுக்கு பட்டது. மேலும் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் இந்த விஷயத்தில் வாய் திறக்காததும் ரசிகர்களின் இந்த முடிவிற்கு காரணங்களாக இருந்தன. ஆனால் ஒருசில இடங்களுக்கு ஆர்த்தி தனியாகவோ, தன்னுடைய மகன்களுடனோ சென்ற நிலையில், இந்த விஷயம் பூதாகாரமாக பேசப்பட்டது. இந்நிலையில், வதந்திகள் தற்போது ஜெயம் ரவியின் அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தன்னை சார்ந்தவர்கள் நலனுக்காக முடிவு: தன்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜெயம் ரவி தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ள நிலையில், அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது குறித்தும் பல்வேறு யூகங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. முன்னதாக ஆர்த்திக்கும் அவரது மாமியாருக்கும் சரியான புரிதல் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், தன்னுடைய அம்மாவின் நலனுக்காக இந்த முடிவை ஜெயம் ரவி எடுத்தாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. எதுவாக இருந்தபோதிலும் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையை தற்போது முறித்துக் கொண்டுள்ளார் ஜெயம் ரவி.


Click it and Unblock the Notifications











