சுதா கொங்கரா படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ.. அடுத்த ஸ்டைலிஷ் வில்லன்!

சென்னை: அடுத்தடுத்த கதைத்தேர்வுகளில் மாஸ் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். அதன் வெளிப்பாடாக கடந்த அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி 300க்கும் மேற்பட்ட கோடிகளை வசூலித்துள்ளது அமரன் படம். இந்தப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து சிபி சக்ரவர்த்தி, நெல்சன் திலீப்குமார் இயக்கங்களில் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்தோ அல்லது முன்னதாகவோ சுதா கொங்கரா கூட்டணியில் நடிகர் சிவகார்த்திகேயன் புறநானூறு படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

sivakarthikeyan purananooru movie jayam ravi


நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான கதைத் தேர்வுகளால் கவனம் ஈர்த்து வருகிறார். இவரது அயலான், மாவீரன் படங்களை தொடர்ந்து கடந்த மாதத்தில் தீபாவளி கொண்டாட்டமாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான அமரன் படம் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோ-பிக்காக வெளியான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தப் படத்தின் வரவேற்பு சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

புறநானூறு படம்: இந்தப் படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுததப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிபி சக்ரவர்த்தி, நெல்சன் திலீப்குமார் ஆகியோருடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இதனிடையே இயக்குநர் சுதா கொங்கராவின் புறநானூறு படத்திலும் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏஆர் முருகதாசுடனான படத்திற்கு பிறகு சிபி சக்ரவர்த்தியுடன் அல்லது சுதா கொங்கராவுடன் சிவகார்த்திகேயன் இணைவார் என்று தெரிகிறது.

sivakarthikeyan purananooru movie jayam ravi

வில்லனாகும் ஜெயம்ரவி?: புறநானூறு படத்தில் முன்னதாக சூர்யா நடிக்கவிருந்த நிலையில், இந்தப்படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் அந்த கேரக்டரில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட்டாகியுள்ளார். முன்னதாக சூர்யாவுடன் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா இணையவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதனிடையே, தற்போது சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ள நடிகர்கள் குறித்த அவ்வப்போது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம்ரவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டைலிஷ் வில்லன்: சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகவுள்ள இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ள நிலையில் இந்தப் படத்தின் வில்லன் கேரக்டர் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக அமையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கேரக்டருக்காக ஜெயம்ரவியுடன் மட்டுமில்லாமல் விஷாலுடனும் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X