அதிரடியாக உருவாகும் சரவெடி கூட்டணி.. ஜெயம் ரவியிடம் ஓகே வாங்கிய ஜிகர்தண்டா இயக்குநர்!
சென்னை: நடிகர் சூர்யாவின் சூர்யா 44 படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தின் சூட்டிங் அந்தமான், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட சூட்டிங் குறித்து டீம் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த பட வேலைகளை கார்த்திக் சுப்புராஜ் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னுடைய அடுத்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் ஜெயம் ரவியை இயக்கவுள்ளதாகவும் இதற்கான கதையை ஜெயம் ரவியிடம் கூறி அவர் ஓகே வாங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இயக்கிவரும் சூர்யா 44 படத்தை தொடர்ந்து அவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்: நடிகர் சூர்யாவின் சூர்யா 44 படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா xx படம் மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றி படமாக மாறியது. இந்நிலையில் தற்போது சூர்யாவின் படத்தை தயாரித்தும் இயக்கியும் வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. முன்னதாக படத்தின் சூட்டிங் அந்தமானில் ஏறக்குறைய ஒரு மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. இதை எடுத்து ஊட்டியிலும் இரண்டாவது கட்ட ஷூட்டிங் நடத்தப்பட்டது.
சூர்யா 44 படம்: மிகவும் விறுவிறுப்பாக சூர்யா 44 படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய அடுத்தப்பட வேலைகளை துவங்கி விட்டதாக கூறப்படுகிறது. தன்னுடைய அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க்கை மேற்கொண்டு வருவதாகவும் இந்த கதையை நடிகர் ஜெயம் ரவியிடம் கூறி கார்த்திக் சுப்புராஜ் ஓகே வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தன்னுடைய ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத் தயாரிப்பாக கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இயக்கிவரும் சூர்யா 44 படத்தை முடித்துவிட்டு ஜெயம் ரவியுடன் அவர் இணையவுள்ளதாகவும் விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜெயம்ரவி -கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்கள் ரிலீசாக உள்ளன. இதில் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரதர் படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜெயம் ரவியின் ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளன.
எந்த மாதிரியான கேரக்டர்?: மினிமம் கேரண்டி ஹீரோவாக தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்து ஜெயம் ரவி கோலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் படத்தில் துவங்கிய இவரது பயணம் பல கலவையான ஜானர்களில் படங்களை கொடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜுடன் ஜெயம் ரவி இணையவுள்ளதாக கூறப்படும் தகவல், ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. எதிர்பார்ப்புகளையும் எகிற செய்துள்ளது. அதிகமான கேங்ஸ்டர் படங்களை கொடுத்துள்ள கார்த்திக் சுப்புராஜ், ஜெயம் ரவியை எந்தமாதிரியான கேரக்டரில் வெளிப்படுத்துவார் என்று தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











