Actor Jayam Ravi: இந்த முறை மிஸ் ஆகாது.. ராஜேஷின் பிரதர் படம் குறித்து ஜெயம் ரவி உறுதி!

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் கதை தேர்வுகள் அடுத்தடுத்து அவருக்கு வெற்றிகளை கொடுத்து வருகிறது. அவரது படங்கள் ரசிகர்களுக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் இரண்டுமே வித்தியாசமான ஜானர்களில் வெளியாகின. இந்த படங்களில் இறைவன் படம் அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை என்ற போதிலும் அவரது கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் அவரது சைரன் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கான பிரமோஷன்களில் அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி, அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழகத்தில் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் ரிலீசையொட்டி தற்போது படத்திற்கான பிரமோஷன்களை ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்து மேற்கொண்டு வருகின்றனர்.

Actor Jayam Ravi shared about his next movie Brother with director M Rajesh

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த வித்தியாசமான ஜானகர்களில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர்களுக்கு அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் வாய்ப்புகளை கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி. அவரது படங்கள் மினிமம் கேரண்டியுடன் சிறப்பான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தன. இதில் இறைவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அவரது ரசிகர்களை கவரவே செய்தது.

சைரன் பட ரிலீஸ்: இந்நிலையில் இன்னும் சில தினங்களில் அவரது சைரன் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார். படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு மற்றும் சமுத்திரகனி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் ரிலீஸ் ஆக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்திற்கான பிரமோஷன்களில் ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சைரன் படத்தின் பிரமோஷன்களில் ஜெயம் ரவி அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.


சைரன் பிரமோஷன்கள்: சைரன் படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தன்னுடைய பேட்டிகளில் கூறி வருகிறார். படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் காம்பினேஷன் இந்த படத்திற்கு சிறப்பான அட்ராக்ஷனை கொடுக்கும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் இரண்டு பாடல்கள் லிரிக்ஸ் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கலந்துள்ளன. ஜிவி பிரகாஷ் இசையும் இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பாதை மாறிய எம் ராஜேஷ்: இந்நிலையில் தன்னுடைய ப்ரோமோஷன்களில் தான் அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள் குறித்த பல தகவல்களையும் ஜெயம் ரவி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் பிரதர், ஜெனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்கள் உருவாகி வருவது குறித்து பேசிய ஜெயம் ரவி, இதில் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் பிரதர் படம் குறித்தும் தன்னுடைய ஷேரிங்கை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் எம் ராஜேஷ் துவக்கத்தில் தன்னுடைய படங்களில் குடும்ப செண்டிமட்டை அதிகமாக வைத்து காமெடியையும் சேர்த்து இயக்கி வந்ததை குறிப்பிட்ட ஜெயம் ரவி, தொடர்ந்து அவரது படங்களில் காமெடி தூக்கலாக இருக்கும்படி மாறிவிட்டதாகவும் கூறினார்.

இருவேறு கெட்டப்புகள்: இந்நிலையில் பிரதர் படத்தில் மீண்டும் குடும்ப சென்டிமென்ட் அதிகளவில் ராஜேஷ் சேர்த்துள்ளதாகவும் இந்த படம் மிகச் சிறப்பான முறையில் ஒர்க் அவுட் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஜெயம் ரவியின் சைரன் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் கைதி என இரு வேறு கெட்டப்புகளில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்த படத்தில் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் உள்ளிட்ட பல விஷயங்களையும் இயக்குநர் சேர்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X