வருகிறான் சோழன்.. ஜெயம் ரவி வெளியிட்ட வேற லெவல் போஸ்டர்.. எதுக்காக தெரியுமா?

சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் வரும் 6ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம் எப்போதுமே சிறப்பான பல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரது இயக்கத்தில் எவர்கிரீன் படங்களே அதிகமாக வெளியாகின. இந்நிலையில் இவரது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். வரும் செப்டம்பர் 30ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது.

பிரம்மாண்டமான படைப்பு

பிரம்மாண்டமான படைப்பு

இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்தின் டீசர், பொன்னி நதி, சோழா சோழா பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமான அளவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப் பாடல்கள் யூடியூபில் அதிகமான லைக்ஸ்களை பெற்று வருகின்றன.

பிரம்மாண்ட ட்ரெயிலர் வெளியீடு

பிரம்மாண்ட ட்ரெயிலர் வெளியீடு

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டிற்கும் தற்போது படக்குழு திட்டமிட்டுள்ளது. வரும் 6ம் தேதி சென்னையின் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வரும் 8ம் தேதி மற்ற மொழிகளிலும் ட்ரெயிலர் வெளியாகவுள்ளது.

ஜெயம்ரவி வெளியிட்ட போஸ்டர்

ஜெயம்ரவி வெளியிட்ட போஸ்டர்

இந்நிலையில் இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்காக தற்போது படக்குழுவினரும் தயாராகி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான போஸ்டரை தற்போது படத்தின் நடிகர் ஜெயம்ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வருகிறான் சோழன் என்றும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பாகங்கள்

இரண்டு பாகங்கள்

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம்தான் தற்போது செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளன. பொன்னியின் செல்வன் நாவல் எப்போதுமே புத்தக பிரியர்களின் மனதுக்கு நெருக்கமான ஒன்று. அந்த நாவலை படிக்கும்போதே நமக்கும் சோழ சாம்ராஜ்யத்தில் வாழ்ந்ததை போன்ற உணர்வை கொடுத்தது.

ரசிகர்கள் காத்திருப்பு

ரசிகர்கள் காத்திருப்பு

தற்போது பொன்னியின் செல்வன் படம் இந்த அனுபவத்தை கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழின் மிகவும் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தை மணிரத்னம் மற்றும் லைகா இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X