Jayam Ravi: இறைவன் சக்சஸ்தான் அதுக்கு காரணமாக இருக்கப்போகுது.. ஜெயம் ரவி உறுதி!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இறைவன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
தனி ஒருவன் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் ஜெயம் ரவி -நயன்தாரா காம்பினேஷன் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இந்த ஜோடி அடுத்ததாக தனி ஒருவன் 2 படத்திலும் இணையவுள்ளது.

இதனிடையே சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள இறைவன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜன கண மன படம் குறித்து பேசிய ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி மினிமம் கியாரண்டி சக்சஸ் ஹீரோக்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். இவரது நடிப்பில் உருவாகும் படங்கள் கண்டிப்பாக கையை கடிக்காது என்ற மனநிலை தயாரிப்பாளர்களிடம் உண்டு. அதை செயல்படுத்தியும் காட்டி வருகிறார். ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 அவருக்கு சிறப்பாக அமைந்தது. டைட்டில் கேரக்டரில் நடித்திருந்த ஜெயம் ரவி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்நிலையில், அடுத்தடுத்து ரிலீஸ் தேதி தள்ளிப்போன அவரது இறைவன் படத்தின் ரிலீஸ் வரும் 28ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. சைக்கோ த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிரட்டியது. இந்நிலையில், இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ளது.
இதையடுத்து படத்தின் ப்ரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி. இறைவன் படம் குறித்து அவர் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சக்சஸ் தன்னுடைய ஜனகணமன படத்தின் சூட்டிங்கை துவக்க காரணமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜனகணமன படத்தில் டாப்சி, அர்ஜூன், ரஹ்மான் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை கொரோனா பாதிப்பிற்கு முன்னதாகவே துவக்கியதாகவும் ஆனால் கொரோனாவால் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ள ஜெயம் ரவி, அதனால் சூட்டிங்கை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்தப் படம் மற்றும் அதன் மேக்கிங் மிகப்பெரிய அளவில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பெரிய அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஸ்பை த்ரில்லர் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும் ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார். படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். இந்த ஆண்டிலேயே அவரது இறைவன், பிரதர், சைரன் ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சைரன் மற்றும் பிரதர் படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. வித்தியாசமான ஜானர்களில் உருவாகியுள்ள இந்தப் படங்களில் வித்தியாசமான கெட்டப்புகளில் ஜெயம் ரவி காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











