அகிலன் டிரைலர் எப்படி இருக்கு.. நாலு பேரு நல்லா இருந்தா? கெட்டவார்த்தை தேவைதானா?

சென்னை : ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், இதில் இடம் பெற்றுள்ள கெட்டவார்த்தை வசனம் தேவையா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஈ, பேராண்மை போன்ற படத்தில் துணை இயக்குநராக இருந்த, என்.கல்யாண கிருஷ்ணன், பூலோகம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்.

ஜெயம் ரவி பாக்ஸராக நடித்திருந்த இப்படத்தில், திரிஷா, பிரகாஷ் ராஜ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அகிலன்

அகிலன்

பூலோகம் படம் வெளியாகி கிட்டத்தட்டட ஏழு ஆண்டுகள் ஆனநிலையில், ஜெயம் ரவி மீண்டும் இயக்குநர் என் கல்யாண கிருஷ்ணனுடன் கை கோர்த்திருக்கிறார். இப்படத்தில், ஜெயம் ரவி கேங்ஸ்டராகவும், பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். மேலும், தன்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது

கஷ்டமான படம்

கஷ்டமான படம்

மார்ச் 10-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தான்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஜெயம் ரவி, அகிலன் மிகவும் கஷ்டமான படம், இந்த படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றார்.

அகிலன் டிரைலர் எப்படி இருக்கு?

அகிலன் டிரைலர் எப்படி இருக்கு?

இதையடுத்து, அகிலன் திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் நேற்று வெளியானது. இரண்டு நிமிடம் ஓடக்கூடிய இந்த டிரைலரில், குற்றஉணர்ச்சி, நன்றி. விஸ்வாசம், ஒழுக்கம் இதெல்லாம் சமூகம் அடிமையாக்க உருவானதுதான். பங்குசந்தையில இருந்து சராசரி மனுசன் வாங்குற வெங்காயம் வரைக்கும் பொருளோட விலைய தீர்மானிக்கிறது சீ ட்ராஃபிக் தான் போன்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

கெட்டவார்த்தை தேவைதானா?

கெட்டவார்த்தை தேவைதானா?

துறைமுகத்தில் நடக்கும் கடத்தல் குறித்து இந்த படம் பேசி உள்ளது. டிரைலரில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தை உணர்த்தும் வகையில், கெட்டவார்த்தை மியூட்டே இல்லாமல் இடம் பெற்றுள்ளது. இந்த டிரைலரைப் பார்த்த நெட்டிசன்கள், டிரைலரில் கெட்டவார்த்தை தேவையா என்றும், ஏற்கனவே இளம் தலைமுறையினர் கெட்டவார்த்தை பேசுவது சகஜமாகி விட்டது என்றும், இதை தவிர்த்து இருக்கலாம் என்றும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X