அகிலனுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டேன் - ஜெயம் ரவி ஓபன் டாக்
சென்னை: அகிலன் படத்துக்காக தான் ரொம்ப கஷ்டப்பட்டதாகவும், தயாரிப்பாளரால்தான் இதெல்லாம் சாத்தியம் ஆனதாகவும் நடிகர் ஜெயம் ரவி பேசியிருக்கிறார்.
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயம் ரவி. தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவான அந்தப் படத்தை ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். முதல் படமே அதிரிபுதிரி ஹிட்டடிக்க ஜெயம் ரவி அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார்.

அண்ணன் அரவணைப்பில் தம்பி
ஜெயம் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட்டானாலும் பெரும்பாலும் அவை அண்ணன் ராஜா இயக்கும் படங்களாகவே அமைந்தன. இருப்பினும் அப்படி அவர் நடித்த படங்களும் ஹிட்டாக கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். இருப்பினும் பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மாறக்கூடிய படத்துக்காக ஜெயம் ரவி காத்திருக்கவும் செய்தார்.

பேராண்மையில் கலக்கிய ஜெயம் ரவி
அப்படி காத்திருந்தவருக்கு பேராண்மை படம் கிடைத்தது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான அப்படத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞனாக துருவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவி. படத்துக்கு தேவையான ஆக்ஷனை அளவாகவும், நடிப்பை சிறப்பாகவும் வழங்கிய ரவியை பார்த்து கோலிவுட் ஆச்சரியம்தான் பட்டது. இதனையடுத்து ஆக்ஷன் படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த ரவி தனி ஒருவன் பட்த்தில் நடித்தார்.

மெகா ஹிட்டான தனி ஒருவன்
தனி ஒருவன் படம்தான் ஜெயம் ரவியை வைத்து ஜெயம் ராஜா இயக்கிய சொந்த கதை ஆகும். ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்த ரவியுடன் அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பக்கா ஆக்ஷன் த்ரில்லராகவும், சமூகத்துக்கு மெசேஜ் சொல்லும் வகையிலும் உருவான அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தி நடித்திருந்தார்.

துறைமுகத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் அகிலன்
இந்தச் சூழலில் ஜெயம் ரவி அகிலன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தை பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியிருக்கிறார். இவர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். படத்தில் ரவியுடன் ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றிருக்கும் சூழலில் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

அகிலன் படம் குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி
அகிலன் படம் குறித்து பேசிய ஜெயம் ரவி, "அகிலன் படம் துறைமுகத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பல சவால்களை சந்தித்தேன். அகிலன் படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டோம். இதெல்லாம் கிடைக்குமா, இதையெல்லாம் எடுக்க முடியுமா என யோசித்தபோது அத்தனையும் தயாரிப்பாளரால் சாத்தியமானது.
பாபி மாஸ்டரை பேராண்மையிலிருந்து தெரியும். இவரும் இயக்குநருடன் இணைந்து பயணித்துள்ளார்.ப்ரியா பவானி ஷங்கர் ஒவ்வொரு படத்திலும் மெருகேறிக்கொண்டே போகிறார். இயக்குநர் கல்யாண் மிகப்பெரிய திறமைசாலி. நல்ல சிந்தனையாளர். மக்களுக்கு நல்ல விஷயம் சொல்ல ஆசாஇப்படும் நபர். அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications