நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா..வீட்டில் தனிமையில் ஓய்வு!
சென்னை : நடிகர் ஜெயம் ரவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019ல் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், இன்னமும் தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் கொரோனா குறித்த அச்சம் மனதை விட்டு நீங்கவில்லை.

ஆட்டிப்படைக்கும் கொரோனா
உலகையை திக்குமுக்காட வைத்த விடாது கருப்பு போல தம்மை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. கொரோனாவால் உயிரிழப்பு ஒருபுறம் என்றால், லாக் டவுன், நேர கட்டுப்பாடு, வேலையின்மை என மற்றொரு பக்கம் சொல்ல முடியாத பல துயரம் நம்மை ஆட்டிப்படைத்தது. வல்லரசு நாடான அமெரிக்காவில் இது வரை 65.8 லட்சம் மக்கள் உயிரிழந்து முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது

மற்றொரு வைரஸ்
எல்லாம் சரியாகிவிட்டது, தடுப்பு மருத்து வந்து விட்டது என நிம்மதி பெருமூச்சு விட்டால், அதற்கு பாதகம் ஏற்பட்டுள்ளது. நேற்று உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன், ஒமிக்ரான் வகையில் மற்றொரு வைரஸ் உருவாகியுள்ளது. இது வேகமாக பரவும் தன்மை கொண்டது ஒரு குண்டை போட்டுள்ளார்.

வீட்டில் தனிமையில்
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.லேசான அறிகுறிகள் இருந்ததால் இன்று மாலை கொரோனா பரிசோதனை செய்த போது கொரோனா பாசிட்டிவ் என வந்ததாகவும், எனவே தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, தன்னை தனிமை படுத்திகொண்டு, உரிய சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தன்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்த தகவலால் அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அடுத்தடுத்த படங்களில்
ஜெயம் ரவி தற்போது கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், ராஜேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு இறைவன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளம்.


Click it and Unblock the Notifications











