Jayam Ravi: கமல் வந்தா நான் ஒரு கிலோ மீட்டர் ஓடி போயிடுவேன்.. சுவாரஸ்யம் பகிர்ந்த ஜெயம் ரவி!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் உலகநாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். 4 வயதில் துவங்கிய இவரது திரைப்பயணம் 69 ஆண்டுகளான பிறகும் தொடர்ந்து வருகிறது.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நடன இயக்குநர் என பன்முகம் காட்டி வருபவர் கமல்ஹாசன்.

எந்த விஷயத்தையும் கற்றுக் கொள்ள ஆர்வம் மட்டுமே போதும் என்பதற்கு தொடர்ந்து எடுத்துக்காட்டாக விளங்கிவரும் கமல்ஹாசன், பல சோதனை முயற்சிகளை தன்னுடைய படங்களில் கையாண்டு வருபவர்.

Actor Jayam ravi hails Kamal haasan on throwback video

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து திரைத்துறையில் பன்னெடுங்காலங்களாக தன்னை இணைத்துக் கொண்டு வருபவர். நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பு, இயக்கம், இசை, பாடகர், பாடலாசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நடன இயக்குநர் என பன்முகங்களை திரையில் காட்டி வரும் கமல்ஹாசன், தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவரை உலக நாயகனாக கொண்டாடிவரும் ரசிகர்கள் சினிமாவின் என்சைக்கிளோபீடியா என்றும் பாராட்டி வருகின்றனர்.

கமல்ஹாசன் பிறந்தநாள்: கமல் தனது 69வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடிவரும் சூழலில் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாகவே கமலின் அடுத்தடுத்த படங்கள் அவரது பிறந்தநாளையொட்டி ட்ரெண்டிங்கில் இருந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

Thug Life படம் அறிவிப்பு: இதனிடையே நேற்றைய தினம் கமல் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள KH234 படத்தின் டைட்டில் டீசர், நடிகர்களின் அறிவிப்பு போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதேபோல இன்றைய தினம் அவரது பிறந்தநாளையொட்டி Thug Life படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, துலகர் சல்மான், த்ரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் இணைந்துள்ளனர். கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள Thug life படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளது.

கமல் வெறியன் என ஜெயம் ரவி உற்சாகம்: அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் தனது KH233 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் கமல். இந்தப் படத்தை அவரது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் Thug life படத்தில் நடிகர் ஜெயம் ரவி கமல்ஹாசனுடன் முக்கியமான கேரக்டரில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னை கமல் வெறியன் என்று கூறிக் கொள்ளும் ஜெயம் ரவி இதுகுறித்து நேற்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாக பதிவை வெளியிட்டிருந்தார்.

கமல் படத்தில் உதவி இயக்குநராக ஜெயம் ரவி: இந்நிலையில் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ஜெயம் ரவி, கமல்ஹாசனின் மிகப்பெரிய பயணத்தில் தான் எறும்பாகவாவது இருக்க விரும்புவதாகவும் எப்போதாவது தேவைப்பட்டால் தன்னை கூப்பிடவும் கேட்டுக் கொண்டிருந்தார். எப்போதும் தான் கமலுடன் இருக்க விரும்புவதாகவும் ஜெயம் ரவி கூறியுள்ளார். கமலின் ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குநராக தான் பணியாற்றியுள்ளதை சுட்டிக் காட்டிய ஜெயம் ரவி, ஆனால் அவருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


கமலை பார்த்து பயந்து ஓடிய ஜெயம் ரவி: கமல் ஆளவந்தான் பட செட்டில் நுழைந்தால் தான் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் ஓடி விடுவேன் என்றும் கூறியுள்ளார். அந்த அளவிற்கு கமலின் சின்சியாரிட்டி மற்றும் ஆராவை பார்த்துள்ளதாகவும் தான் இந்த அளவிற்கு நடிகனாக உயர்ந்ததற்கு 85 சதவிகிதம் கமல் தான் காரணம் என்றும் மீதம் 15 சதவிகிதம் தன்னுடைய தந்தை காரணம் என்றும் கூறியுள்ளார். கமல் முன்னிலையில் ஏதாவது அவார்டை வாங்கிவிட வேண்டும் என்று தான் கனவு கண்டதாகவும் ஜெயம் ரவி அந்த மேடையில் பேசியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X