Jayam Ravi birthday: சைரன் படத்தின் ஃப்ரீபேஸ் லுக்.. என்ன ஜெயம் ரவி இப்படி இறங்கிட்டாரு!

சென்னை: நடிகர் ஜெயம்ரவி அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் தன்னை இணைத்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி அவருக்கு நல்ல ரெவ்யூஸ்களை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் அடுத்ததாக அவரது இறைவன் படம் ரிலீசாகவுள்ளது. படத்தில் நயன்தாரா ஜோடியாகியுள்ளார்.

Actor Jayam Ravis birthday special preface Look of Sirem movie released

ஜெயம்ரவியின் பிறந்தநாளையொட்டி சைரன் படத்தின் ப்ரீபேஸ் லுக் வெளியானது: நடிகர் ஜெயம்ரவி அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு நல்லமுறையில் கைக்கொடுத்தது. டைட்டில் கேரக்டரில் நடித்திருந்த ஜெயம் ரவியின் பர்பார்மென்சை ரசிகர்கள் கொண்டாடினர். முதல் பாகம் அளவிற்கு வசூல்சாதனையை இந்தப் படம் செய்யவில்லை என்றபோதிலும் இரண்டாவது பாகமும் மிரட்டலான வகையில்தான் அமைந்தது.

இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம்ரவி நடிப்பில் இறைவன் படம் ரிலீசாகவுள்ளது. நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் அஹமது. தனி ஒருவன் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் ஜயம் ரவி -நயன்தாரா ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி சிறப்பான விமர்சனங்களை குவித்துள்ளது. மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம்ரவி நடிப்பில் உருவாகிவரும்ப படம் சைரன். இன்றைய தினம் ஜெயம் ரவியின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் ஃப்ரீபேஸ் லுக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ள நிலையில், படத்தின் இந்த மிரட்டலான ப்ரீபேஸ் லுக்கில் சிறப்பாக காணப்படுகிறார் ஜெயம் ரவி. அனுபவம், அமைதி என அழுத்தமான கேரக்டரில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த ப்ரீபேஸ் வீடியோவில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காணப்படுகிறார்.

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ போன்ற படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்த ஆண்டனி பாக்யராஜ் இந்தப் படத்தின்முலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தில் இரட்டை வேடங்களில் ஜெயம் ரவி நடித்துள்ளார். மற்றொரு கேரக்டரில் யுங் ஜெயம்ரவியை பார்க்க முடிகிறது. நடுத்தர வயது லுக்கில் அவர் படத்தில் நடித்துள்ள கேரக்டரின் ப்ரீபேஸ் லுக்தான் தற்போது வெளியாகியுள்ளது. இந்த லுக்கிற்காக உடலை ஏற்றி ஒன்றரை ஆண்டுகள் அவர் மெனக்கெட்டதாக தெரிகிறது.

படத்தில் இந்த இரு கேரக்டர்களும் ஒன்றாக தோன்றும் நிலையில் அதிகமான வித்தியாசத்தை பார்க்க முடியும் என்று இயக்குநர் படம் குறித்து தற்போது அப்டேட் தெரிவித்துள்ளார். படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் என இரண்டு நாயகிகள் இணைந்துள்ளனர். படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் உள்ளிட்ட அப்டேட்கள் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X