Brother movie: ரசிகர்களை கவர்ந்தாரா பிரதர்.. 2 நாள் வசூல் நிலவரம் இதோ!
சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் படம் மிகப்பெரிய அளவில் தீபாவளிக்கு ரிலீஸானது. இந்த படத்தை இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கியிருந்தார். வழக்கமாக தன்னுடைய படங்களில் அவர் காமெடி கலாட்டா செய்வது போலவே இந்த படத்திலும் செய்திருந்தார். ஆயினும் காமெடியில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தள்ளன.
அக்கா மற்றும் தம்பி உறவை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களத்தை ராஜேஷ் உருவாக்கியுள்ளார். இந்த கதை களத்தையும் அவர் இன்னும் அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கலாம் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்கள் தீபாவளியையொட்டி விடுமுறை தினங்களாக அமைந்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களில் இந்த படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளது. ஜெயம் ரவியுடன் பூமிகா, நட்ராஜ், பிரியங்கா மோகன் விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் பிரதர் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

பிரதர் படம்: நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் படம் தீபாவளி ரிலீசாக நேற்று முன்தினம் திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் அக்கா மற்றும் தம்பியின் உறவை மையமாக வைத்து கதைக்களத்தை இயக்குனர் எம் ராஜேஷ் உருவாக்கியுள்ளார். படத்தில் வழக்கம் போல தன்னுடைய காமெடி கலாட்டாவை அவர் வைத்துள்ளார். இந்த படத்தின் காமெடி டிராக்கில் விடிவி கணேஷ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இருந்தபோதிலும் படத்தின் கதைக்களம் ரசிகர்களை கவர தவறியுள்ளது. ஆயினும் கடந்த இரு தினங்களில் இந்தப் படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்து வருகிறது.
ஜெயம் ரவி: படம் கடந்த தீபாவளியன்று ரிலீசான நிலையில், முதல் நாளிலேயே 2.25 கோடிகளை இந்திய அளவில் மட்டுமே வசூலித்துள்ளது. நேற்றைய தினமும் விடுமுறை கொண்டாட்டத்தை அடுத்து படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்துள்ளது. நேற்றைய தினம் இரண்டாவது நாள் வசூலாக 2,25 கோடி ரூபாய்களை இந்தப் படம் வசூலித்துள்ளது. மொத்தத்தில் கடந்த இரு தினங்களில் இந்த படத்தின் வசூல் இந்திய அளவில் மட்டுமே 4.75 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளது. இந்த வசூல் எண்ணிக்கை வாரயிறுதி நாட்களான இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்ப சென்டிமெண்ட்: அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. பிரதர் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்தடுத்து ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. மூன்று படங்களுமே வித்தியாசமான கதைக்களங்களில் உருவாக்கியுள்ளதாக அவர் தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். பிரதர் படம் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகா நடித்துள்ளார். ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள நிலையில் நட்ராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்டவர்களும் இந்த படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இயக்குநராகும் ஜெயம்ரவி: இதையடுத்து ஜீனி படம் பேண்டஸி ஜானரில் உருவாகியுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படம் ரொமான்டிக் ஜானரில் உருவாகியுள்ள நிலையில், இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ளார். இவர்களின் கெமிஸ்ட்ரி முன்னதாக வெளியான போஸ்டர்கள் உள்ளிட்டவற்றிலேயே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக இயக்கத்திலும் களம் இறங்க உள்ளதாக தன்னுடைய பேட்டியொன்றில் ஜெயம்ரவி கூறியுள்ளார். மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்க உள்ளதாகவும் முதல் படத்தில் ஹீரோவாக யோகி பாபு நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் கூட்டணி முன்னதாக கோமாளி உள்ளிட்ட படங்களில் சிறப்பாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜெயம் ரவி இயக்கத்தில் யோகி பாபு எத்தகைய கதைக்களத்தில் இணைவார் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











