மக்காமிஷியா அப்படீன்னா.. பிரமோவுடன் வெளியான ஜெயம்ரவியின் பிரதர் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர் என மூன்று படங்களின் சூட்டிங்கை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளார். இதில் எம் ராஜேஷ் எழுதி இயக்கியுள்ள பிரதர் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவு செய்யப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ், பூமிகா சாவ்லா, சீதா உள்ளிட்டவர்கள் முன்னணி கேரக்டர்களின் நடித்துள்ளனர். இந்த படத்தில் அக்கா மற்றும் தம்பியின் பாசத்தை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Jayam Ravi Brother movie M Rajesh tamil cinema

நடிகர் ஜெயம்ரவி: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான சைரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஜெயம்ரவியின் நடிப்பு வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர் ஆகிய படங்களில் ஜெயம் ரவி கவனம் செலுத்தி வருகிறார். இதில் பிரதர் படத்தை இயக்குனர் எம் ராஜேஷ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் ஜெயம் ரவியின் முப்பதாவது படமாக உருவாகியுள்ளது.

பிரதர் படம்: பிரதர் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அவரது அக்காவாக பூமிகா நடித்துள்ளார். மேலும் படத்தில் நட்டி நட்ராஜ், சரண்யா பொன்வண்ணன், சீதா, விடிவி கணேஷ் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.இந்த படம் அக்கா -தம்பி உறவை அடிப்படையாகக் கொண்டு பேமிலி என்டர்டைன்மெண்ட் படமாக உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள நிலையில் விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரதர் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வரும் 20ம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவை தற்போது படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இந்த பிரமோ வீடியோவில் மக்காமிஷி என்ற பாடல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கலக்கல் குத்தாட்ட பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலின் இந்த மக்காமிஷி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது குறித்து விரைவில் படக்குழுவினர் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்தடுத்த படங்கள்: பிரதர் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு காமெடியை மையமாக கொண்டு ஜெயம்ரவி நடித்துள்ள நிலையில் அடுத்தடுத்து அவரது நடிப்பில் ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை படங்களும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் காதலிக்க நேரமில்லை படத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. ரொமான்டிக் என்டர்டைன்மென்ட் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். முன்னதாக இந்த படங்களின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படங்களும் ஜெயம்ரவிக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X