Brother: வெளியானது பிரதர் பட மக்காமிஷி பாடல்.. ஃபுல் எனர்ஜி ஜெயம்ரவி.. வாய்ஸ் மாத்தியிருக்கலாம் மாமே
சென்னை: நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள பிரதர் படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கியுள்ள சூழலில் படம் அக்கா -தம்பி சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகா நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வீடியோ பாடலாக வெளியாகி உள்ளது. இந்த பாடல் மக்காமிஷி என்ற வார்த்தையுடன் உருவாகியுள்ள சூழலில் இதற்கான அர்த்தம் என்ன என்பது கடந்த இரு தினங்களாக ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் தேடி வருகின்றனர். இதற்கான விளக்கத்தை ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் முன்னதாக கொடுத்த நிலையில் தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம்ரவி: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு மிகச் சிறப்பான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது/ இந்த படத்தில் டைட்டில் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருந்தார்/ படத்தில் அவரது கம்பீரம் ரசிகர்களை சிறப்பான விமர்சனங்களை கொடுக்கச் செய்தது. முன்னதாக பொன்னியின் செல்வன் மற்றும் இறைவன் படங்கள் அடுத்தடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிலையில் இறைவன் படம் சொதப்பலான முடிவுகளையே கொடுத்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் படமும் அவருக்கு சிறப்பாக கை கொடுக்கவில்லை.
அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் ஜெயம் ரவி தற்போது நடிக்க முடித்துள்ளார். பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜீனி ஆகிய படங்களை அவர் முடித்துக் கொடுத்துள்ளார். இதில் பிரதர் படம் எம் ராஜேஷ் இயக்கத்தில் காமெடி கலாட்டாவுடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, நட்டி நடராஜ், சீதா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். எப்போதுமே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எம் ராஜேஷ் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வரும் சூழலில் இந்த படமும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களை சிறப்பாக என்டர்டைன் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

பிரதர் படம்: முன்னதாக சில படங்களில் ஜெயம் ரவி காமெடி கலாட்டாக்கள் செய்துள்ள நிலையில் இந்த படமும் அந்த படங்களின் வரிசையில் இடம் பெறும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் தற்போது வீடியோ பாடலாக வெளியாகி உள்ளது. மக்காமிஷி என்ற அந்தப் பாடல் குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் தற்போது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இந்தப்பாடல் உருவாகியுள்ளது. பாடலை பால் தாப்பா பாடியுள்ளார். இந்தப் பாடலில் மிகப்பெரிய வைப்புடன் ஜெயம்ரவியை பார்க்க முடிகிறது.
வி ஆர் வெயிட்டிங் பிரதர்: ஆனால் என்னவொன்று பாடகர் பால் தாப்பாவின் குரல் ஜெயம்ரவிக்கு சிறிதும் பொருந்தவில்லை என்ற கருத்துக்களை இந்தப் பாடல் எதிர்கொண்டுள்ளது. தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் காமெடி கலாட்டாக்கள் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நிறைந்திருந்த ஜெயம்ரவி, சமீப காலங்களில் மிகவும் அழுத்தமான கதைக்களங்களில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்மை பிரதர் படம் மூலம் ஜெயம்ரவி வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். வி ஆர் வெயிட்டிங் பிரதர்.


Click it and Unblock the Notifications











