Iraivan movie: இறைவன் வசூல் குறைந்ததற்கு ஹீரோதான் காரணமா.. கடுப்பில் தயாரிப்பு தரப்பு!
சென்னை: நடிகர் ஜெயம்ரவி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் இறைவன்.
முன்னதாக இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டு தள்ளிப் போன நிலையில், கடந்த 28ம் தேதி படம் வெளியானது. இந்தப்படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.
சென்னையில் இறைவன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.

இறைவன் படம் சொதப்ப ஜெயம்ரவிதான் காரணமா?: நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகியிருந்த படம் இறைவன். இந்தப் படம் கடந்த 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில், படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. முன்னதாக படத்திற்கான ப்ரமோஷன்களை படக்குழுவினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். மேலும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் சிறப்பாக பங்கேற்ற ஜெயம் ரவி, அதிரடியான பல விஷயங்களை பேசினார். முன்னதாக இந்த ஆண்டிலேயே அவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், இறைவன் படம் மிகச்சிறப்பான வசூலையும் வரவேற்பையும் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. முன்னதாக வெளியான ராட்சசன், போர் தொழிலுக்கு இணையான வெற்றியை இந்தப் படம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
முன்னதாக தனி ஒருவன் படம் மூலம் மிகப்பெரிய கெமிஸ்ட்ரியை ஏற்படுத்தியிருந்த ஜெயம் ரவி -நயன்தாரா ஜோடி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்திருந்த நிலையில், இந்த ஜோடியும் படத்திற்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. முன்னதாக வெளியான ட்ரெயிலர் உள்ளிட்டவை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து படத்தின் நாயகன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசியதுதான் படத்தின் வசூலை குறைத்துவிட்டதாக தற்போது தயாரிப்புத் தரப்பு கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, குழந்தைகளுடன் படத்தை பார்க்க வராதீர்கள் என்று மக்களிடம் பேசினார். இதை குறிப்பிடுவதற்குதான் படத்திற்கு சென்சார் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இதை தனியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதே தயாரிப்புத் தரப்பினரின் கேள்வியாக உள்ளது. படத்தின் நாயகனே இப்படி பேசியதால், படத்திற்கு ரசிகர்களின் கூட்டம் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட போது, ஜெயம் ரவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, 3 மாதங்கள் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. இதையடுத்து நயன்தாராவின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி இப்படி பேசியதும் படத்தின் வெற்றிக்கு தடையாக அமைந்ததாக தற்போது தயாரிப்பு தரப்பிற்கு வருத்தத்தை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











