Genie Movie 2nd look poster: வெளியானது ஜீனி படத்தின் 2வது லுக்.. தேவதைகளாக களமிறங்கும் நாயகிகள்

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் இந்த ஆண்டில் வெளியான சைரன் படங்கள் மிகச் சிறப்பாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து வெற்றிப்பட இயக்குனர்களுடன் இணைந்து அவர் நடித்து வருகிறார். அடுத்ததாக பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை என ஜெயம் ரவியின் நடிப்பில் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கின்றன. இதில் பேன்டசி என்டர்டெயினராக உருவாகிவரும் ஜீனி படத்தை அர்ஜூனன் ஜூனியர் இயக்கியுள்ளார். படத்தில் கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி மற்றும் தேவயாணி ஆகியோர் நடித்துள்ளனர்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் ஜெயம் ரவியின் கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருவதாக கூறப்பட்டுள்ளது. ஜீனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. போஸ்டரில் நடிகர் ஜெயம் ரவி அற்புத விளக்கில் இருந்து தடைகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவதாக காணப்பட்டார். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தில் மூன்று நாயகிகள் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ள நிலையில் அவர்கள் இந்த இரண்டாவது போஸ்டரில் ஜெயம் ரவியுடன் இணைந்துள்ளார்.

Actor Jayam Ravi s Jenie movie second look poster released

ஜெயம் ரவியின் ஜீனி படம்: நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் சைரன் படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து அவரது மார்க்கெட் வேல்யூ கோலிவுட்டில் அதிகரித்துள்ளது. அவரது சம்பளமும் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்தடுத்து அர்ஜூனன் ஜூனியர் இயக்கத்தில் ஜீனி, எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில்ர அறிமுக இயக்குநர் அர்ஜூனன் ஜூனியர் இயக்கத்தில் ஜீனி படம் உருவாகியுள்ளது.

பிரம்மாண்ட தயாரிப்பு: இந்தப் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளது. அவர்களின் 25வது படமாக ஜீனி அமைந்துள்ள நிலையில் படத்தை அதிகளவிலான பட்ஜெட்டுடன் தயாரித்து வருகின்றனர். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பேன்டசி என்டர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றைய தினம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இதில் அற்புத விளக்கிலிருந்து தடைகளை உடைத்துக் கொண்டு ஜெயம் ரவி வெளியில் வருவதாக காட்டப்ட்டிருந்தது. அவரது லுக்கும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்திருந்தது.

வெளியானது 2வது லுக் போஸ்டர்: இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் படத்தின் நாயகிகள் கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் நடிகை தேவயாணி உள்ளிட்டவர்களும் இந்த போஸ்டரில் காணப்படுகின்றனர். இதில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கபி ஆகியோர் தேவதைகளாக காணப்படுகின்றனர். கிருத்தி ஷெட்டி நார்மலாக காணப்படுகிறார். இந்தப் போஸ்டர் நேற்றைய தினம் வெளியான அதே லுக்கில் ஜெயம் ரவி காணப்படுகிறார். அவர் அலாவுதீன் பூதம் போல காணப்படுகிறார்.

ரிலீஸ் அப்டேட் கேட்கும் ரசிகர்கள்: இவர்கள் அனைவரும் கம்பளத்தில் வானத்தில் பறப்பதை போல இந்த போஸ்டரில் காணப்படுகின்றனர். படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளது. படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் ட்ரெயிலர், ரிலீஸ் குறித்த அடுத்தடுதத அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த ஆண்டில் வெளியாகவுள்ள படங்களில் ஜீனி படமும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X