Jayam Ravi: கேரியர் பெஸ்ட் படம்.. ட்விஸ்ட் வைத்த ஜெயம் ரவி.. ஜீனி படத்தின் பூஜை வீடியோ இதோ!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி இயக்குநர்களின் பெஸ்ட் சாய்ஸ் என்ற சிறப்பை பெற்றவர். இவர் நடிக்கும் படங்கள் கையை கடிக்காது என்ற பெயரை தயாரிப்பாளர்களிடமும் பெற்றுள்ளார்.
இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீசான பொன்னியின் செல்வன் 2 படத்தில் அருண்மொழி வர்மன் என்ற கேரக்டரில் அதிரடி காட்டியிருந்தார்.

இந்நிலையில் அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் இறைவன், சைரன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இந்நிலையில் அவரது JR32 படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.
ஜெயம் ரவியின் ஜெஆர்32 படத்தின் பூஜை வீடியோ வெளியீடு: நடிகர் ஜெயம் ரவி, சாக்லேட் பாயாக தன்னுடைய கேரியரை துவக்கியவர். ஆனாலும் அதிலும் ஆக்ஷன் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். தன்னுடைய முதல் படமான ஜெயம் படத்திலேயே, ஆக்ஷன், காமெடி என கலந்துக் கட்டி அடித்திருந்தார். இந்தப் படத்தில் சதா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவரது அண்ணன் ராஜா படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் சூப்பர்ஹிட்டடித்து ஜெயம் ரவிக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து அம்மா -மகன் சென்டிமெண்ட்டில் ஜெயம் ரவி நடித்தருந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. நீண்ட காலங்களுக்கு பிறகு, இந்தப் படத்தில் நடிகை நதியா, ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி உண்மையான அம்மா -மகன்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தில் பாக்ஸிங் வீரராக களமிறங்கியிருந்தார் ஜெயம் ரவி.

தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்களின் படங்களில் கமிட்டாகி பல சிறப்பான படங்களை கொடுத்துள்ளார் ஜெயம் ரவி. இந்நிலையில், கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் பெற்றிருந்தார். படத்தில் அருண்மொழி வர்மன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ஜெயம் ரவி. இதனிடையே, அவரது அகிலன் படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அடுத்ததாக ஜெயம்ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள இறைவன் படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷுடன் ஜெயம் ரவி ஜோடி சேர்ந்துள்ள சைரன், எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் என அடுததடுத்த கமிட்மெண்ட்களை கைவசம் வைத்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயம் ரவி கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள JR32 படத்தின் பூஜையும் போடப்பட்டுள்ளது.
ஜெயம் ரவியுடன் இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் இணைந்துள்ளனர். படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படத்தை புவனேஷ் அர்ஜுனன் இயக்கவுள்ளார். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜை வீடியோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஜெயம் ரவியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஜெயம் ரவி மற்றும் நாயகிகள் பங்கேற்றிருந்தனர். படத்தில் ஜெயம் ரவிக்கு கல்யாணி பிரியதர்ஷன், க்ரீத்தி ஷெட்டி மற்றும் வமிக்கா கேபி என மூன்று நாயகிகள். இந்தப் படத்திற்கு ஜீனி என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் நிறுவனத் தயாரிப்பு நிறுவனத்தின் 25வது படமாக இந்தப் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படவுள்ளது.
பான் இந்தியா படமாக உருவாகவுள்ள ஜீனி படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில், சூட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே பூஜையின் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதனிடையே, இந்தப் படம் தன்னுடைய கேரியரில் பெஸ்ட்டாக அமையும் என்றும் இதற்கான காரணத்தை ரிலீஸின்போது தெரிந்து கொள்ளலாம் என்றும் ஜெயம் ரவி அந்த வீடியோவில் ட்விஸ்ட் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











