Jayam Ravi: ஜெயம் ரவி இல்லாமலேயே நடந்து முடிந்த JR33 சூட்டிங்.. மாஸ் காட்டும் கிருத்திகா உதயநிதி!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள இறைவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் அடுத்தடுத்த படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வருகிறது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் JR33 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

Actor Jayam Ravis JR33 movie first schedule wrapped up

ஜெயம் ரவி இல்லாமலேயே நிறைவடைந்த JR33 படத்தின் முதல்கட்ட சூட்டிங்: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன், அகிலன் படங்கள் வெளியாகின. இதில் பொன்னியின் செல்வன் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில், அகிலன் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் 2வது பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயம் ரவியின் இறைவன் படமும் வெளியானது.

இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போன நிலையில், கடத்ந சில தினங்களுக்கு முன்பு வெளியானது. சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். முன்னதாக தனி ஒருவன் படத்தில் இணைந்திருந்த இந்த ஜோடி மிகப்பெரிய கெமிஸ்ட்ரியை கொடுத்திருந்த நிலையில், இறைவன் படத்தில் அதை பெற தவறிவிட்டது. ராட்சசன், போர் தொழில் படங்களுக்கு இணையாக எதிர்பார்க்கப்பட்ட இறைவன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. சைரன், ஜீனி, பிரதர் மற்றும் அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 என அடுத்தடுத்தப் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜெயம் ரவி, இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் JR33 படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் நித்யாமேனன் உள்ளிட்டவர்களின் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. திருச்சிற்றம்பலம், 96 போன்ற படங்களில் வரிசையில் இந்தப் படமும் ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே விரைவில் சென்னையில் துவங்கவுள்ள படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங்கில் ஜெயம் ரவி பங்கேற்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. கோமாளி படத்தை தொடர்ந்து சோலா ஹிட் கொடுக்காமல் உள்ளார் ஜெயம் ரவி. அவரது அகிலன், இறைவன் படங்கள் சொதப்பிய நிலையில் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்கள் மல்ட்டி ஸ்டார் படங்களாக வெளியாகி வெற்றி பெற்றன. இந்நிலையில் அடுத்தடுத்து வெளியாகும் படங்களை அவரது ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர். இதில் தனி ஒருவன் 2 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X