Jayam Ravi: டாடா இயக்குநருடன் இணையும் ஜெயம் ரவி.. பூஜையுடன் துவக்கம்.. அட இவர்தான் ஸ்கிரிப்ட்டா!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து வருகிறார். இந்த ஆண்டிலேயே அவரது நடிப்பில் சைரன், பிரதர் படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே வித்தியாசமான ஜானர்களில் வெளியான நிலையில் இரண்டுமே அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை.

இதனிடையே ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக ஜெனி, காதலிக்க நேரமில்லை படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இந்தப் படங்கள் இன்னும் சில மாதங்களில் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ள நிலையில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் இணைந்து வருகிறார் ஜெயம் ரவி. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் புறநானூறு படத்திலும் JR34 படத்திலும் இணைந்துள்ளார்.

jayam ravi jr34 movie purananooru movie jr34
நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்களுடனும் இளம் இயக்குநர்களுடனும் இணைந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன், இறைவன் படங்கள் வெளியான நிலையில், இந்த ஆண்டிலும் சைரன், பிரதர் என படங்கள் ரிலீசாகின. இந்தப் படங்கள் அடுத்தடுத்து சில மாத இடைவெளிகளில் ரிலீசான நிலையிலும் ஜெயம் ரவிக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இந்த 4 படங்களின் கதைக்களத்தையும் வித்தியாசமான ஜானர்களில் தேர்ந்தெடுத்து நடித்திருந்தார் ஜெயம் ரவி. இருந்தபோதிலும் இந்தப் படங்கள் சிறப்பாக அமையவில்லை.

அடுத்தடுத்த படங்கள்: இதனிடையே அடுத்தடுத்து ஜெனி, காதலிக்க நேரமில்லை படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இந்தப் படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், அதன் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்தப் படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் ஜெயம் ரவி. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் இணைந்துள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தின் சூட்டிங் இன்றைய தினம் துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


JR34 பட பூஜை: இந்தப் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் சூர்யா, நஸ்ரியா, துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் நடிக்கவிருந்த நிலையில், அந்த புராஜெக்ட் டிராப்பானது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க படம் துவங்கியுள்ளது. இந்தப்படத்தில் மட்டுமில்லாமல் ஜெயம் ரவியின் JR34 படத்தின் பூஜையும் இன்றைய தினம் சிறப்பான வகையில் போடப்பட்டுள்ளது. இதன் சூட்டிங் வரும் திங்கட்கிழமை துவங்கவுள்ளதாககூறப்பட்டுள்ளது.


டாடா பட இயக்குநருடன் கூட்டணி: இந்தப் படத்தை டாடா புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கவுள்ளார்.படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் பிரதர் படத்தை தொடர்ந்து மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜுடன் ஜெயம் ரவி இணையவுள்ளார். தவ்தி ஜிவால் நாயகியாக கமிட்டாகியுள்ள இந்தப் படத்தில் பி வாசுவின் மகன் சக்தியும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்களிலும் ஜெயம் ரவி ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X