ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் ட்ரீட்.. ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட காதலிக்க நேரமில்லை டீம்.. மஜா பண்றாருப்பா!

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. அவரது வாழ்க்கையில் முக்கியமான முடிவை நேற்றைய தினம் ஜெயம் ரவி எடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் அவர் கொண்டாட்ட மோடில் இருப்பாரா என்பது சந்தேகமே. ஆயினும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை டீம் கொண்டாட்ட வீடியோவை பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியிட்டுள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவன தயாரிப்பாக உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் உருவாகியுள்ளது காதலிக்க நேரமில்லை படம். இந்தப் படத்தின் BTS காட்சிகளைத்தான் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக படக்குழு இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் அவர் அவர் நித்யா மேனனுடன் மிகவும் ரொமான்டிக்காக இருப்பதாக காணப்படுகிறது.

jayam ravi kadhalikka neramillai movie birthday treat

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. ஜெனீ, பிரதர், காதலிக்க நேரமில்லை என இவரது படங்களின் பட்டியல் நீண்டு வருகின்றன. இந்த ஆண்டிலேயே இவரது சைரன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் அடுத்ததாக பிரதர் படம் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஜெயம் ரவியின் வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுத்திருந்தார். தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தி உடனான 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ள உள்ளதாகவும் விவாகரத்திற்கு அப்ளை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

jayam ravi kadhalikka neramillai movie birthday treat

மனைவியை பிரியும் ஜெயம்ரவி: இந்நிலையில் இன்றைய தினம் விவாகரத்திற்கு அப்ளையும் செய்து முடித்துள்ளார். இந்த பிறந்தநாள் அவருக்கு இத்தகைய கடினமான தருணங்களை கொடுத்துள்ளது. நீண்ட யோசனைகளுக்கு பிறகு அதிகமான பரிசினைகளுக்கு பிறகு ஆர்த்தி உடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவை தான் எடுத்துள்ளதாக ஜெயம் ரவி நேற்றைய தினம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவதா வேண்டாமா என்று அவரது படக்குழுவினரும் ரசிகர்களும் மிகுந்த யோசனைக்கு உள்ளாகினர். ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு தங்களது சப்போர்ட் வேண்டும் என்பதை உணர்ந்த காதலிக்க நேரமில்லை டீம் தற்போது அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக சிறப்பு பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.

காதலிக்க நேரமில்லை படம்: ரெட் ஜெயண்ட் நிறுவனத் தயாரிப்பாக உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். அவர் முன்னதாக காளி, வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் அவரது பேப்பர் ராக்கெட் வெப் தொடர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக ஜெயம் ரவி-நித்யா மேனன் காம்பினேஷனில் காதலிக்க நேரமில்லை படத்தை ரொமான்டிக் ஜானரில் இயக்கி முடித்துள்ளார். படத்தில் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

ஸ்பெஷல் BTS வீடியோ: அடுத்தடுத்து சீரியசான கதைக்களங்களில் நடித்து வந்த ஜெயம் ரவிக்கு இந்த படம் மிகச் சிறப்பாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், படத்தில் யோகிபாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக படததின் ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் வீடியோ போன்றவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள BTS வீடியோ, ரசிகர்களை மிகச்சிறப்பாக என்டர்டெயின் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X