Jayam Ravi: ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை பட சூட்டிங் நிறைவு.. கேக் வெட்டி கொண்டாட்டம்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது நடிப்பில் பொன்னின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியான நிலையில் இதில் பொன்னியின் செல்வன் 2 அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது.

இந்நிலையில் இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான சைரன் படமும் ஜெயம் ரவிக்கு கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. அடுத்தடுத்து பிரதர், ஜெனீ, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் இணைந்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படங்களின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த சூழலில் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Jayam ravi Bangalore tamil cinema

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த வெற்றிப்பட கூட்டணியில் தன்னை இணைத்து வருகிறார். தற்போது ஜெனீ, பிரதர் மற்றும் காதலிக்க நேரமில்லை படங்களில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படங்களின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில் அடுத்தடுத்த ரிலீஸ் செய்திகளை இந்தப் படங்கள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் காதலிக்க நேரமில்லை படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் அதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இந்த படம் உருவாகி வந்த நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் சூட்டிங் ஒட்டுமொத்தமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Jayam ravi Bangalore tamil cinema

காதலிக்க நேரமில்லை படம்: இதையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டத்திலும் படக்குழுவினர் ஈடுபட்டனர். இயக்குனர் கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்ற நிலையில், ஜெயம் ரவி, நித்யா மேனனுக்கு கிருத்திகா, கேக் ஊட்டிய புகைப்படங்கள் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து உள்ள சூழலில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் யோகி பாபு, லால், வினய், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்.

Jayam ravi Bangalore tamil cinema

சூட்டிங் நிறைவு: படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர், இசை வெளியீடு உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்தும் படக் குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் இணைந்திருந்த ஜெயம் ரவி அந்த படத்திற்காக தன்னுடைய கால்ஷீட்டை ஒதுக்கியிருந்த சூழலில் சொதப்பலான திட்டமிடலால் அவரது கால்ஷீட் வீணடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் காதலிக்க நேரமில்லை படத்திற்காக கால்ஷீட் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

Jayam ravi Bangalore tamil cinema

ஜெயம் ரவி -நித்யா மேனன் கூட்டணி: இந்நிலையில் தக் லைஃப் படத்திலிருந்து விலகிய ஜெயம் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மீண்டும் காதலிக்க நேரமில்லை படத்தின் சூட்டிங்கில் இணைந்திருந்தார். பெங்களூரில் இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் படத்தின் சூட்டிங் முற்றிலும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்து கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வணக்கம் சென்னை மற்றும் காளி படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன. அந்த வகையில் தற்போது ஜெயம் ரவி -நித்யா மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X