Jayam Ravi: மிரட்டலான ஜாம்பி அனுபவத்திற்கு தயாராகுங்க மக்களே.. மிருதன் 2 பட வேலைகள் துவக்கம்!
சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்தடுத்து பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்கள் ரிலீசாக உள்ளன. இதில் பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மிருதன் 2 படத்தில் ஜெயம் ரவி இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளை சக்தி சௌந்தரராஜன் துவங்கியுள்ளதாகவும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மிகப்பெரிய புரொடக்ஷன் கம்பெனி தயாரிப்பில் இந்த படம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. மீண்டும் ஜாம்பி கதைக்களத்தில் இந்த படம் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் ஜெயம்ரவி: நடிகர் ஜெயம் ரவி, லக்ஷ்மி மேனன், அனேகா சுரேந்திரன், காளி வெங்கட், ஆர்என்ஆர் மனோகர், ஸ்ரீமன் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2016ம் ஆண்டில் வெளியான படம் மிருதன். தமிழில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் முதன் முதலில் ஜாம்பி கதைக்களத்தில் வெளியான படம் மிருதன். ஹாலிவுட்டில் ஜாம்பி கதைகள் வெளியான நிலையில் இந்தியாவில் இந்தப் படம் முதல் முயற்சியாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் காவல் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்திருந்தார் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.
மிருதன் படம்: ஜெயம் ரவியின் தங்கையாக அனேகா சுரேந்திரன் நடித்திருந்தார். மருத்துவரான லட்சுமி மேனனை ஒருதலையாக ஜெயம் ரவி காதலித்த நிலையில் ஊட்டியில் இருக்கும் ஒரு ரசாயன பேக்டரியில் இருந்து வெளியேறும் கழிவால் ஜாம்பி நோய் பரவ ஊர் முழுவதும் ஜாம்பிக்கள் பரவுவதாக மிருதன் படத்தின் கதைக்களம் காணப்பட்டது. இந்நிலையில் ஹீரோவின் தங்கையும் காணாமல் போக தங்கையை கண்டுபிடிக்கும் ஹீரோவை ஜாம்பி கடித்து விட ஹீரோயினை காப்பாற்றி விட்டு ஜாம்பியாக ஜெயம் ரவி மாறுவதாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் அமைந்திருந்தது. இதையடுத்து கிளைமாக்சில் ஜெயம் ரவி சென்னைக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி கத்துவது போலவும் முடிக்கப்பட்டு இருந்தது.
மிருதன் 2 பட வேலைகள்: இதனால் இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மிருதன் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்தையும் சக்தி சௌந்தர்ராஜனே இயக்க உள்ளதாகவும் ஹீரோவாக ஜெயம் ரவி நடிக்க உள்ளதாகவும் கூறப்படும் சூழலில் முன்னணி நடிகர்களை இந்தப் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. படத்தில் லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிப்பாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. அவர் படங்களில் அதிகமாக நடிக்காத நிலையில் வேறு ஒரு நடிகை இந்த படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் சூட்டிங்: இந்நிலையில் இந்தப் படத்தின் வேலைகளை சக்தி சௌந்தர்ராஜன் துவங்கியுள்ளதாகவும் படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த படம் மூலம் சக்தி சௌந்தர்ராஜன் ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணைய உள்ளனர். முன்னதாக டிக்டிக்டிக் மற்றும் மிருதன் படங்களில் இந்த காம்பினேஷன் இணைந்து மிகச் சிறப்பான வெற்றியை கொடுத்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











