Siren Box Office Day 4: படிப்படியாக குறைந்தது.. சைரன் நான்காம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சைரன்: ரைசன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான போதே படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 16ஆம் தேதி சைரன் திரைப்படம் வெளியானது. நல்ல ஒப்பனிங்கை பெற்ற இப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பையும் கீர்த்தி சுரேஷின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டினார்கள்.

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் சைரன். படத்தின் தலைப்புக்கு ஏற்படியே படத்தில் அதிரடி தொடர் கொலை என படம் க்ரைம் திரில்லர் ஜனரில் இருந்தது. இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு விதமான கெட்டப்பில் நடித்து பாராட்டை பெற்றார்.

Actor Jayam ravis siren box office day 4 collection

சைரன்: ரைசன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான போதே படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 16ஆம் தேதி சைரன் திரைப்படம் வெளியானது. நல்ல ஒப்பனிங்கை பெற்ற இப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பையும் கீர்த்தி சுரேஷின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டினார்கள்.

படத்தின் கதை: ஆம்புலன்ஸ் டிரைவரான (திலகன் வர்மா) ஜெயம் ரவி தனது மனைவி ஜெனிஃபரை கொலை செய்த குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். கொலை பழியை சுமந்துகொண்டு சிறையில் இருக்கும் ஜெயம் ரவியின் தந்தைக்கு உடல்நிலை சாரியில்லாததால் பரோலில் வெளியே வருகிறார். ஜெயம் ரவி வெளியே வரும் நேரத்தில் தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. அந்த கொலையை செய்தது யார்... எதற்காக தொடர் கொலை நடக்கிறது என்பது தான் சைரன் படத்தின் கதை.

நான்காவது நாள் வசூல்: அந்த வகையில் முதல் நாளில் சைரன் 1.40 கோடிகளை வசூலித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 2.08 கோடியைம், மூன்றாவது நாளான ஞாயிற்றுக் கிழமையான சைரன் திரைப்படம் 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. நான்காம் நாளான நேற்று திங்கட் கிழமை வேலை தினம் என்பதால், படத்தின் வசூல் குறைந்தே இருந்தது. இதன்படி, சைரன் திரைப்படத்தின் நான்கு நாள் மொத்த வசூல் ரூ.6.61 கோடியாக உள்ளது.

ஓடிடி ரிலீஸ்: மேலும், சைரன் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமை ஓடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்கு விற்கப்பட்டுள்ளதால், இத்திரைப்படம் அதன் திரையரங்குகள் முடிந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சைரனின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஸ்னி பிளஸ் ஹாட் நிறுவனமே வெளியிடும்.

கைவசம் உள்ள படம்: அகிலன், இறைவன் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், இத்திரைப்படம் ஓரளவுக்கு ஜெயம் ரவிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. இதனால், அவர் சற்று மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். நடிகர் ஜெயம் ரவி காதலிக்க நேரமில்லை, ப்ரதர், ஜீனி, தனி ஒருவன் 2 என வரிசையாக பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X