Actor Jayam ravi: கண்ணம்மா.. க்யூட் 2வது சிங்கிள்.. சைரன் இசை வெளியீடு குறித்த அப்டேட் இதோ!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சைரன் படத்தை அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. முன்னதாக விஸ்வாசம், இரும்புத்திரை என 7 படங்களுக்கு ரைட்டராக பணியாற்றியுள்ள ஆண்டனி பாக்கியராஜ் இந்தப் படத்தில் இயக்குநராகியுள்ளார். படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டும் நாயகன் சிறைக்கு செல்லும் காரணத்தை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளதாக படத்தின் இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் தனது சமீபத்திய இன்டர்வியூவில் கூறியுள்ளார். படத்தில் மெச்சூர்டான கேரக்டரில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஜெயம் ரவி நடித்துள்ளதாகவும் இந்தப் படத்தில் அவருக்கு நடிக்க அதிகமான சான்ஸ் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் இளமையான ஹீரோ மற்றும் மெச்சூர்டான கேரக்டர் என இருவேறு கெட்டப்புகளில் ஜெயம் ரவி நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ள சைரன் படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. பொன்னியின் செல்வன் 2, இறைவன் என அடுத்தடுத்த படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டில் ரிலீசாகின. இதில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் டைட்,டில் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் சிறப்பாக அமைந்த நிலையில் இறைவன் படம் சொதப்பியது. இந்நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. படம் நான் லீனியர் முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
இருவேறு கெட்டப்பில் ஜெயம் ரவி: படத்தில் இளைஞர் மற்றும் நடுத்தர வயதுக்காரர் என இருவேறு கெட்டப்புகளில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்தப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்துள்ள நிலையில், கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவரும் ஹீரோவும் எதிரெதிர் துருவங்களாக நடித்துள்ளதாகவும் ஆண்டனி தெரிவித்துள்ளார். படத்தில் மாறுபட்ட கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படம் பேமிலி சென்டிமெண்ட்டை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாகவும் அதில் ஒரு மெசேஜ் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இசை & ட்ரெயிலர் வெளியீடு: இதனிடையே இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு வரும் 7ம் தேதி கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெறவுள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இதில் கலந்துக் கொள்ளவுள்ளனர். இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளைய தினம் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணம்மா என்று துவங்கும் இந்தப் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. குழந்தையுடன் ஜெயம் ரவி கொஞ்சும்படியாக இந்தப் பாடலின் காட்சிகள் காணப்படுகின்றன. முன்னதாக வெளியான படத்தின் முதல் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்தப்பாடலும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜிவி பிரகாஷ் இசை: ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் இந்தப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ள நிலையில் சாம் சிஎஸ் பின்னணி இசையை உருவாக்கியுள்ளார். இவர்களின் கூட்டணி படத்திற்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ளது. படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ள நிலையில் படம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











