Actor Jayam Ravi: நான் ஜெயிலுக்கு போறதுதான் என் மகளுக்கு சந்தோஷம்னா.. சைரன் படத்தின் ரிலீஸ் ப்ரமோ!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து சிறப்பான படங்களில் தன்னை கமிட் செய்து கொண்டு நடித்து வருகிறார். பல ஆண்டுகளாக முன்னணி ஹீரோவாக இவரது பயணம் தொடர்ந்து வருகிறது. ஜெயம் படத்தில் துவங்கிய இவரது பயணம் அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்து வருகின்றன. அடுத்ததாக வரும் 16ஆம் தேதி இவரது நடிப்பில் சைரன் படம் ரிலீஸ் ஆக உள்ளது/ சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. வரும் 16ம் தேதி படத்தின் ரிலீசை முன்னிட்டு அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக படத்தின் இசை வெளியீடு உள்ளிட்டவை பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜெயம் ரவியும் அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வருகிறார். இதனிடையே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அடுத்தடுத்த பிரமோ வீடியோக்களையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தை அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக உதவி இயக்குநர், ஸ்கிரிப்ட் ரைட்டர் என முன்னணி படங்களில் பணியாற்றியுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி: ஜெயம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகர் ஜெயம் ரவி. தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் இந்த படத்தில் அவர் நடித்திருந்தார். இந்தப்படம் அவருக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து சாக்லேட் பாய் கேரக்டர்களிலும் குறும்புத்தனமான இளைஞனின் கேரக்டர்களிலும் நடித்து வந்த ஜெயம் ரவி, ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஆயினும் அவரை குறும்புத்தனமான கேரக்டரில் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகின்றனர். இருந்தபோதிலும் தன்னுடைய வயதுக்கு தக்கப்படியான கேரக்டர்களிளை அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சைரன் படம்: கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகின. இந்த படங்களில் பொன்னியின் செல்வன் 2 அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. இறைவன் படம் சொதப்பியது. இந்நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே வரும் 16ஆம் தேதி அவரது சைரன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் இரு வேறு கெட்டப்புகளில் அவர் நடித்துள்ளார். படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார். படம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
அடுத்தடுத்த பிரமோஷன்கள்: இதையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்டவை பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளனை. ஜெயம் ரவியும் அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வருகிறார் அதில் சைரன் படம் குறித்தும் அவரது அடுத்தடுத்த பிராஜெக்ட்கள் குறித்தும் அவர் பேசி வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாக்கியுள்ள சைரன் படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்நிலையில் இந்தப்படம் நாளைய தினம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
ரிலீஸ் பிரமோ: அந்த வகையில் படத்தின் ரிலீஸ் ப்ரோமோ நேற்றைய தினம் வெளியாகி இருந்தது. முன்னதாக படத்தின் அடுத்தடுத்து மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நேற்றைய தினம் வெளியாகியிருந்த ரிலீஸ் ப்ரமோவில் ஜெயம் ரவி கைதியாக காணப்படுகிறார். அப்பாக்களை ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் பார்க்கும் மகள்களின் கதறல்களை பார்த்திருக்கிறீர்களா என்று ஜெயம் ரவி இந்த பிரமோவில் கேள்வி எழுப்புகிறார். தான் அந்த கதறலை கேட்டுள்ளதாகவும் தன் மகளின் கதறலை விட அவள் சந்தோஷமாக இருப்பது மட்டுமே தனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்றும் அவர் இந்த ப்ரொமோவில் கூறுகிறார்.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: தொடர்ந்து ஜெயம் ரவியின் மகள் கீர்த்தி சுரேஷிடம் அந்த ஆளை விட்டுடாதீங்க என்று கூறுவதாகவும் பிரமோவில் காணப்படுகிறது. தொடர்ந்து ஒரு அப்பனாக தான் ஜெயிலுக்கு செல்வதுதான் தன் மகளுக்கு சந்தோஷம் என்றால் அதை அவளுக்கு ஆயுசுக்கும் கொடுப்பேன் என்பதாக இந்த பிரமோ முடிந்திருந்தது.. இந்நிலையில் தற்போது படத்தின் அடுத்த ரிலீஸ் பிரமோ வெளியாகியுள்ளது. இதில் ஜெயம் ரவி மட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷும் தான் கொலை செய்யவில்லை என்று கூறுவதாக அமைந்துள்ளது. கைதியாக இருக்கும் ஜெயம் ரவி மட்டுமில்லாமல் போலீஸ் அதிகாரியான கீர்த்தி சுரேஷூம் இதே டயலாக்கை பேசுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











