Siren: பிப்ரவரி 16ல் ரிலீசாகும் ஜெயம்ரவியின் சைரன்..தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்
சென்னை: நடிகர் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சைரன். வரும் பிப்ரவரி 16ம் தேதி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் பாடலில் ஜெயம்ரவி மற்றும் அனுபமாவின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. முன்னதாக படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மிக அதிகமான விலைக்கு கைமாறியுள்ளது.
ஜெயம்ரவி நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்களில் பொன்னியின் செல்வன் 2 அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப்படத்தில் டைட்டில் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து சில மாதங்களிலேயே இறைவன் படம் வெளியானது. ஆனால் படம் நினைத்தது போல சிறப்பாக அமையவில்லை. சைக்கோ திரில்லராக வெளியான இந்தப் படம் ராட்சசன், போர்த்தொழில் படங்களின் வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஜெயம்ரவி நடிப்பில் சைரன் படம் உருவாகியுள்ளது.

நடிகர் ஜெயம்ரவி: நடிகர் ஜெயம்ரவியின் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. பொன்னியின் செல்வன் 2 படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்திருந்தார் ஜெயம்ரவி. இதற்கு நேரெதிராக இறைவன் படம் சைக்கோ திரில்லர் படமாக வெளியானது. நயன்தாரா இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்திருந்தார். இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது சைரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜெயம்ரவி. 2024ம் ஆண்டின் துவக்கத்திலேயே ஜெயம்ரவியின் படம் வெளியாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
சைரன் படம்: அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஜெயம்ரவி. வரும் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள அவரது சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்தில் கைதி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் ஜெயம்ரவி. படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான பர்ஸ்ட் சிங்கிளில் ஜெயம்ரவி மற்றும் அனுபமாவின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருந்தது.
தமிழக வெளியீட்டு உரிமை: முன்னதாக படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் சிறப்பான விலைக்கு கைமாறியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதன் அறிவிப்பு வீடியோவை படத்தின் சூட்டிங் ஸ்பாட் காட்சிகளுடன் ஜெயம்ரவி உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தை நடிகரும் அமைச்சருமான உதயநிதி பார்த்ததாகவும், இதுபோன்ற கதைக்களத்தில் படத்தை உருவாக்கியுள்ளது குறித்து அவர் இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷின் கலக்கல் இசை: தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்திற்கு தன்னுடைய இசையால் மேலும் சிறப்பை சேர்த்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்னும் இரு வாரங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.இந்தப்படமும் ஜெயம்ரவிக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிகர்சல் வீடியோவை ஜிவி பிரகாஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் சித் ஸ்ரீராம் சிறப்பான வகையில் ரிகர்சல் செய்ததை பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











