Actor Jayam Ravi: ஜெயம்ரவி இல்லாமல் நடந்து முடிந்த தனி ஒருவன் 2 பட பூஜை.. அப்டேட் இதோ!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது சைரன் படம்/ இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கி இருந்தார்/ படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ். அனுபமா பரமேஸ்வரன். யோகி பாபு. சமுத்திரகனி என முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூலில் சிறப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது பிரதர், ஜெனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன/
இதனிடையே தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் அவர் கமிட் ஆகியுள்ளார். ஜெயம்ரவி, நயன்தாரா மற்றும் அரவிந்த்சாமி லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது தனி ஒருவன். ஹிப்ஹாப் ஆதி இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் படத்தின் பாடல்கள் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தன. ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்த நிலையில் தற்போது 8 ஆண்டுகள் கழித்து இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை தயாரிப்பு தரப்பு துவங்கியுள்ளது. இந்தப் படத்திலும் நயன்தாராவே நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து மாஸ் படங்களை கொடுத்து வருகிறார். தன்னுடைய இயல்பான நடிப்பால் தன்னுடைய கேரக்டருக்கு சிறப்பை சேர்த்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகின. இதில் பொன்னின் செல்வன் 2 படம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக கை கொடுத்தது. இறைவன் படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவர தவறிவிட்டது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி ஜெயம் ரவி நடிப்பில் சைரன் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இரு வேறு கெட்டப்புகளில் ஜெயம் ரவி நடித்திருந்தார்.
சைரன் படம்: படத்தில் அப்பா மற்றும் மகளுக்கு இடையில் நடக்கும் பாச போராட்டத்தை கதைக்களமாக இயக்குனர் கொண்டிருந்தார். குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன், காமெடி என படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தை அடுத்து, அடுத்தடுத்த படங்களில் தன்னை கமிட் செய்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி. தற்போது அவரது நடிப்பில் பிரதர், ஜெனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன, இந்த படங்கள் ஏறக்குறைய சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் ஜெயம் ரவி கமிட் ஆகியுள்ளார்.
தனி ஒருவன் 2 பட பூஜை: இந்த படத்தின் பூஜை நேற்றைய தினம் சென்னையில் போடப்பட்டுள்ளது. அலுவலக அளவில் மிகவும் எளிமையாக நடந்த இந்த பூஜையில் நடிகர் ஜெயம் ரவி பங்கேற்கவில்லை. காஷ்மீரில் நடைபெற்று வரும் மற்றொரு படத்தின் ஷூட்டிங்கில் அவர் கலந்து கொண்டு நடித்து வருவதால் இந்த பூஜையில் அவர் பங்கேற்க முடியவில்லை என்று பட குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2015ம் ஆண்டில் வெளியான தனி ஒருவன் படம் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியானது. இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கியமான கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
ரசிகர்கள் உற்சாகம்: இந்தப் படத்தின் மேக்கிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமானது. இந்நிலையில் தனி ஒருவன் 2 படம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இந்த படம் குறித்து மோகன் ராஜா அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது விஜய்யின் The greatest of all time படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனம், இதன் சூட்டிங் மார் 31ம் தேதி நிறைவடைந்தவுடன் தனி ஒருவன் 2 படத்தின் சூட்டிங்கை சம்மரில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











