Aarthi Ravi: ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஆர்த்தி ரவி.. க்யூட் போட்டோஸ் இதோ!
லண்டன்: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன. அடுத்ததாக அவரது நடிப்பில் இறைவன் படம் ரிலீசாகவுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையில் ஆர்த்தி என்பவரை காதல் திருமணம் செய்துக் கொண்டார் ரவி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். தற்போது லண்டனில் ஆர்த்தி மகன்களுடன் சுற்றுலா கொண்டாட்டத்தில் உள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். வேல்ஸ் நிறுவனத்தின் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
ஜெயம் ரவியின் மனைவி -மகன்கள் லண்டனில் சுற்றுலா கொண்டாட்டம்: கடந்த 2003ம் ஆண்டில் வெளியான ஜெயம் படத்தின்மூலம் தமிழில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் ஜெயம் ரவி. தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் சதாவுடன் ஜோடி சேர்ந்திருந்தார் ஜெயம் ரவி. இந்தப் படத்தை தொடர்ந்து பேராண்மை, தனி ஒருவன் என ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு உள்ளான படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களை போலவே கோமாளி உள்ளிட்ட படங்களும் கவனத்தை ஈர்த்தன.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக இவரது நடிப்பில் சைரன், இறைவன் என படங்கள் வெளியாகவுள்ளன. தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்திலும் வேல்ஸ் நிறுவனத்தின் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தன்னுடைய அண்ணனுடன் தனி ஒருவன் 2 படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்திலும் ஜெயம் ரவி ஹீரோவாக களமிறங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரு மகன்கள் உள்ளனர். இதில் டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஆரவ் நடித்திருந்தார். அவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது.

இந்நிலையில் ஜெயம் ரவி தன்னுடைய படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய மகன்களுடன் ஆர்த்தி லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ளார் ஆர்த்தி. தொடர்ந்து புடவை உள்ளிட்டவற்றில் தான் எடுக்கும் புகைப்படங்களையும், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் எடுக்கும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு வருகிறார். அவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர்.
இந்நிலையில் லண்டனில் தன்னுடைய மகன்களுடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஆர்த்தி. கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து இந்தப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்களில் மிகவும் க்யூட்டாக ஆர்த்தி உள்ளதாக கமெண்ட்ஸ் எழுந்துள்ளது. முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்தப் புகைப்படங்களில் ஆர்த்தி உள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











