twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சப் இன்ஸ்பெக்டர் டூ நடிகர்.. தமிழ் சினிமாவிலும் தனது தடத்தை பதித்தவர்.. யார் இந்த ஜெயபிரகாஷ் ரெட்டி?

    |

    சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்த ஜெயபிரகாஷ் ரெட்டியின் மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மிரட்டல் வில்லனாகவும், காமெடி வில்லனாகவும், குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் கோலோச்சியவர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி.

    74 வயதான ஜெயப்பிரகாஷ் ரெட்டிக்கு இன்று அதிகாலை கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது திடீர் மரணத்தால் தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழ் திரையுலகமும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

     அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா? அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன? அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா? அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன?

    சப் இன்ஸ்பெக்டர்

    சப் இன்ஸ்பெக்டர்

    1946 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சிர்வேல் கிராமத்தில் பிறந்த ஜெயப்பிரகாஷ் ரெட்டி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக தனது பணியை தொடங்கினார். ஆனால் சிறுவயது முதலே சினிமா மீது தீராத காதல் கொண்ட அவர் 1988ஆம் ஆண்டு வெளியான பிரம்ம புத்ருடு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

    தமிழில் 6 படங்கள்

    தமிழில் 6 படங்கள்

    தெலுங்கில் இதுவரை, சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கெவரு என்ற படத்தில் நடித்தார். கன்னட படங்களிலும் மிரட்டியுள்ள ஜெயப்பிரகாஷ் ரெட்டி தமிழில் 6 படங்களில் நடித்துள்ளார்.

    ஆறு படத்தில் ரெட்டி

    ஆறு படத்தில் ரெட்டி

    2003ஆம் ஆண்டு அஜித்தின் ஆஞ்சனேயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த ஜெபி எனும் ஜெயப்பிரகாஷ் ரெட்டி 2005ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஆறு படத்தில் மிரட்டல் வில்லனாக அலற விட்டார். இவரது கொடூர வில்லன் கேரக்டரை அழுத்தமாக கூறும் வகையில் பெண்களை கடத்தும் காட்சிகள், கொலை காட்சிகள் மற்றும் ரெட்டி ஆளுங்க பொண்ண தூக்கிட்டாங்க போன்ற டயலாக்குகள் இடம்பெற்றன. இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.

    விஜயகாந்தின் தர்மபுரி

    விஜயகாந்தின் தர்மபுரி

    அடுத்து அர்ஜூனின் சின்னா படத்திலும் நடித்துள்ளார். இதில் சின்னாவின் எக்ஸ் பாஸாக நடித்திருப்பார் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. அதனை தொடர்ந்து 2006ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் தருமபுரி படத்தில் எம்எல்ஏ கொண்ட மூக்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

    உத்தம புத்திரன்

    உத்தம புத்திரன்

    2007ஆம் ஆண்டு வெளியான திரு ரங்கா என்ற படத்திலும் 2010 ஆண்டு வெளியான தனுஷின் உத்தமபுத்திரன் படத்திலும் நடித்தார். உத்தமபுத்திரன் படத்தில் சின்னமுத்து கவுண்டர் கதாப்பாத்திரத்தில் நகைச்சுவை வில்லனாக ரணகளப்படுத்தியிருப்பார் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. இந்தப் படமும் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது.

    அதிர்ச்சியும் இரங்கலும்

    அதிர்ச்சியும் இரங்கலும்

    மறைந்த நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னணி நடிகர்கள் என பலரும் அதிர்ச்சியையும் இரங்கலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    English summary
    Jayaprakash Reddy started his carreer as Sub inspector due cinema interest he left the job and started to act in cinema. Jayaprakash reddy passes away today due to heart attack. He has done 6 movies min Tamil cinema with leading actors.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X